எ - து: அதுகேட்டவன், நீ அருள்செய்து என்னைக் கூடப்பெறின், அவ்விடத்தே ஒன்று தாய் வருக; ஒன்று அயலார் வருக; அவர்களேயன்றிப் பின்னை நின் தந்தை தான் வரினும் வருக; அதற்கு யான் வருந்தேனென்றான். எ - று. 13 | 1நின்னையான் சொல்லினவும் பேணாய் நினைஇக் (1)கனைபெய 2லேற்றிற் றலைசாய்த் தெனையதூஉ மாறெதிர் கூறி மயக்குப் படுகுவாய் கலத்தொடியாஞ் செல்வுழி நாடிப் புலத்தும் 3வருவையா னாணிலி நீ |
எ - து: அதுகேட்ட தலைவி, நின்னையான் எத்தன்மையவாகவுஞ் சொன்ன 4வார்த்தைகளைப் பரிகரியாயாய்க் கூட்டத்தையே நினைந்து செறிந்த மழையிடத்து ஏறுபோலே தலையைச் சாய்த்து யான் கூறியவற்றிற்கு எதிராகச் சில சொற்களைக் கூறி இங்ஙனம் மயக்கமுறுகின்றவனே! நாணமில்லாதவனே! நீ கறவைக்கலத்தோடே யாஞ் செல்லும் பசுமேய்க்கின்ற இடத்தையும் நாடி என் தமையன்மார் நிற்கும் புலத்திலும் வருவையாயிருந்தாய்; ஆண்டுக் கூடுதுமெனக் குறியிடங்கூறினாள். எ - று. இதனால், 5இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது. இஃது ஐஞ்சீரடுக்கிவந்த கலிவெண்பாட்டு. (14) (117). | மாண வுருக்கிய நன்பொன் மணியுறீஇப் பேணித் துடைத்தன்ன மேனியாய் கோங்கின் முதிரா விளமுகை யொப்ப வெதிரிய தொய்யில் பொறித்த வனமுலையாய் மற்றுநின் கைய தெவன்மற் றுரை; | 6 | கையதை, சேரிக் கிழவன் மகளேன்யான் மற்றிஃதோர் மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்ததோர் போழிற் புனைந்த வரிப்புட்டில் புட்டிலு ளென்னுள காண்டக்கா யெற்காட்டிக் காண்; |
(இ) “இருளுறழ் கூந்தலா ளென்னை, யருளுறச் செயினுமக் கறனுமா ரதுவே” (ஈ) “நீநல்கி னுண்டென் னுயிர்” கலி: 61: 16 - 17, 19 - 20; 140: 33 - 34, 94: 12. 1. “கனைபெயல்” (கலி. 45: 4) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. (பிரதிபேதம்)1நினைஇயான், 2ஏற்றித் தலைசாய்த்து, 3வருகுவையால், 4வார்த்தைகளையும், பரிகரியாய், 5இருவரும் புணர்ச்சியுவகை யெய்தினார் இது அஞ்சீர்.
|