‘’திணைமயங்குறுதலும்’’ என்னும் (1) சூத்திரத்து ‘’நிலனொருங்குமயங்குத 1லின்று’’ என்றதனாற் காலமொருங்கு மயங்குமென்றது கொண்டு சான்றோர் பலருஞ் செய்யுள்செய்தார். ‘’கானன் மாலைக் கழிப்பூக் 2கூம்ப’’ என்னும் (2) அகப்பாட்டும் நெய்தற்கண் மாலைவந்தது. ‘’தொல்லூழிதடுமாறி’’ என்னும் (3) நெய்தற்கலியுட் கங்குலும் மாலையும் முன்பனியும் வந்தவாறுகாண்க. இந்நிலத்து மாலைவந்த பாட்டுக்கள் 3பலவுமுள. பிற சான்றோர்செய்யுட்களுட் காலம் மயங்குமாறு புலவுங் கண்டுகொள்க. (1) (119). | அகன்ஞாலம் விளக்குந்தன் (4) பல்கதிர் வாயாகப் பகனுங்கி யதுபோலப் (5) படுசுடர் கல்சேர விகன்மிகு நேமியா னிறம்போல 4விருளிவர (9)நிலவுக்காண் பதுபோல வணி 5மதி யேர்தரக் | | 5 கண் (7) பாயல் பெற்றபோற் (8) கணைக் 6கால மலர்கூம்பத் (9) தம் 7புகழ் கேட்டார்போற் றலைசாய்த்து மரந்துஞ்ச |
1. தொல். அகத். சூ. 12. 2. அகம். 40. 3. கலி. 129. 4. ‘’பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய’’ குறிஞ்சி. 219. 5. ‘’ஒண்சுடர் கல்சேர’’ கலி. 121 : 1. 6. பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி முன்னத்தான் உவமை கூறுதற்கு இவ்வடியை மேற்கோள்காட்டி. இது காணப் பிறிதாகிய பொருளோடு உவமை கூறாமையிற் பிறிதொடுபடாதாயிற் றென்றும், மதியினதெழுச்சியை நோக்குதலிற் பிறப்பொடுநோக்கிற்றென்றும் கூறுவர், இளம்; தொல். உவமை. சூ. 23. ‘பிறிதொடு’ 7. ‘’பாயல்கொள் பவைபோலக் கயமலர் வாய்கூம்ப’’ கலி. 134 : 8. 8. கணைக்காலென்பது, நீர்ப்பூக்களுள் நற். 230, ஐங்.68; ஆம்பலுக்கும், நற். 262, குவளைக்கும், நற். 138, குறுந். 9. நெய்தலுக்கும் வருதலோடு திணைமொழி. 32 - இல் மருதுக்கும் அடையாக வந்துள்ளது. 9. (அ) ‘’சான்றோர், புகழு முன்னர் நாணுப’’ குறுந். 252. (ஆ) ‘’கோவெனப் பெயரிய காலை யாங்கது, தன்பெயராகலி னாணி’’ (இ) ‘’பரந்தோ ரெல்லாம் புகழத் தலைபணிந், திறைஞ்சியோனே’’ புறம். 152 : 21 - 22, 285 : 13 - 14. (ஈ) ‘’பிறர் தன்னைப் பேணுங்கா னாணலும்..................ஊராண்மை யென்னுஞ் செருக்கு’’ திரிகடுகம். 6. (பிரதிபேதம்)1இலவென்றதனால், 2கூம்பும், கம்பும், 3பலவுமுளவென்றுணர்க. பிறசான், 4இருள்வர, 5மதிபோதரக், 6காலவலர், காலலர், 7புகழக்கேட்டார்.
|