பக்கம் எண் :

760கலித்தொகை

1எ - து: ஆற்றுதற்கோரிட மின்றாக அலைத்தலைச்செய்யும் பொல்லாங்கே செய்யும் மாலைக்காலத்தாலே வெறுப்புக்கொண்ட வருத்தத்தீரும்படி காதலர் விரைந்து வருகையினாலே, அம்மாலை இராக்காலத்திடத்தே சென்றொளித்து, நாற்படையாலே இளைத்த 2அரசன் இளைத்த பருவத்தே அவனுக்கு மேலாய் வந்த 3கடியபகையானது அந்தப் பகைமையை விரையப்போக்கி நீங்காமல் நின்று காத்து நடத்தும் நல்ல இறைவன் வந்து தோன்றக் கெட்டுப்போனாற் போலே, இல்லையாகா நின்றதெனக் கண்டோர் கூறினார். எ - று.

4பகை கெட்டாங்கு மாலை ஒளித்து இல்லாகின்றதென்க.

இதனால், கண்டோர்க்கு ஆக்கம்பற்றிய மருட்கை பிறந்தது.

(1) இஃது இடையிடை சொற்சீரடிவந்து எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றிய கொச்சகம். (3)

(121)ஒண்சுடர் கல்சேர வுலகூருந் தகையது
தெண்கட லழுவத்துத் திரைநீக்கா வெழுதரூஉந்
தண்கதிர் மதியத் தணிநிலா நிறைத்தரப்
புள்ளின மிரைமாந்திப் புகல்சேர வொலியான்று
வள்ளிதழ் கூம்பிய மணிமரு ளிருங்கழி
பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப;
7தாங்கருங் காமத்தைத் தணந்துநீ புறமாறத்
தூங்குநீ ரிமிழ்திரை துணையாகி யொலிக்குமே
யுறையொடு வைகிய போதுபோ லொய்யென
நிறையானா திழிதரூஉ நீர்நீந்து கண்ணாட்கு;
11வாராய்நீ புறமாற வருந்திய மேனியாட்
காரிருட் டுணையாகி யசைவளி யலைக்குமே

1. (அ) இச்செய்யுளுக்கு (தொல். செய். சூ. 155. நச்.) இக்குறிப்பே சிறிது வேறுபடக் காணப்படுகின்றது;(ஆ) பேராசிரியரும் “அருடீர்ந்த காட்சியா னறனோக்கா னயஞ்செய்யான்” எனவும்.........அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகியது போலும் கொச்சகம் வருங்கால், ஒத்தாழிசையும் வண்ணகமும்போலத் தனிச்சொற்பெற்றும் பெறாதும் வரும்” என்று கூறி, இதனைத் தனிச்சொற் பெற்று வந்ததற்கு உதாரணங்காட்டினர்; தொல். சூ. 155.

(பிரதிபேதம்) 1எ - து என்று அவன் கூறும்படியாகஆற்றுதற்கு,2அரசினிளைத்த, 3கடியபகையறிந்து, அப்பகை, கடியபகையான அந்தப்பகை, 4பகைகெட்டாங் கென்க மாலை.