பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்765

எ - து: இனிய துணையாகியநீ கைவிட்டு உன்மனையிடத்தே இருக்கையினாலே ஒள்ளிய சுடரையுடைய (1) ஞாயிற்றினது மிக்க ஒளியாலே தன் ஒளி கெடுகின்ற உச்சிக்காலத்து மதிபோலே நன்மைகெட்ட முகத்தினையுடையாட்கு இராக்காலத்திடத்தே தன் சேவலைப் பிரிந்து வருந்துந் 1தனிக்குருகு தான் துணையாகி உசாவாநிற்கும். எ - று.

எனவாங்கு, அசை.

20

எறிதிரை தந்திட விழிந்தமீ னின்றுறை
மறிதிரை வருந்தாமற் கொண்டாங்கு நெறிதாழ்ந்து
சாயினள் வருந்தியா ளிடும்பை
பாய்பரிக் கடுந்திண்டேர் களையினோ விடனே

எ - து: இனிய துறையிடத்தே எறிகின்ற திரை ஏறக் கொண்டுவந்து 2போகடுகையினால் எக்கரிலேகிடந்த மீனை மீள்கின்ற அத்திரை வருந்தாதபடி கைக்கொண்டுபோன தன்மைபோலே நீ முன்பு நடத்தின நெறி தாழ்கையினாலே மெலிந்தனளாய் வருந்தினவளுடையவருத்தத்தைப் பாய்ந்துசெல்லும் பரிபூண்ட கடிய திண்ணிய தேர் வெளியாக வரைவோடே வந்து களையுமாயின் நல்லகாலமென வரைவுகடாயினாள். எ - று.

இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது.

இஃது ஒத்தாழிசைக் கலி. (4)

122 

கோதை யாயமு மன்னையு மறிவுறப்
போதெழி லுண்கண் புகழ்நல னிழப்பக்
காதல்செய் தருளாது துறந்தார்மாட் டேதின்றிச்
சிறிய துனித்தனை துன்னாசெய் தமர்ந்தனை
பலவுநூ றடுக்கினை யினைபேங்கி யழுதனை
யலவலை யுடையை யென்றி தோழீ;

கேளினி;


க்ரௌஞ்சமென்பது அன்றிலின் பெயரென்பராதலானும் அன்றிலுக்கு (ஊஊ) “தடவுநிலைப்பெண்ணைக், கொழுமடலிழைத்தசிறுபொற்குடம்பைக், கருங்காலன்றிற் காமர் கடுஞ்சூல், வயவுப்பெடையகவும் பானாட்கங்குல்” எனப் பனைமடல்வாழ்க்கையும் கருங்காலுடைமையும் துணைபிரியா வியல்பும் கூறப்படுதலாலும் குருகென்பது அன்றிலாவிருக்கலாமென்று தோற்றுகிறது; இன்னும் ஆராய்தற்பாலது. அன்றிலின்செய்தி கலி. 129 : 12 - ஆம் அடிக்குறிப்பிற் காணலாகும்.

1. (அ) “பகலாங்கட் பையென்ற மதியம்போல்” கலி. 143 : 2; (ஆ) ”விரிகதிர்ப் பரிதி முன்னர் வெண்மதி மழுங்கும்” நைடத. போர். 2.

(பிரதிபேதம்) 1தணிக்குருகுதுணை, 2போடுகையினாலே.