பக்கம் எண் :

774கலித்தொகை

இதனால், தலைவிக்கு இழிவு தோன்றிற்று.
இஃது ஒத்தாழிசைக்கலி.(6)

124ஞாலமூன் றடித்தாய முதல்வற்கு முதுமுறைப்
பாலன்ன மேனியா னணிபெறத் தைஇய
நீலநீ ருடைபோலத் தகைபெற்ற வெண்டிரை
வாலெக்கர் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப;
5ஊரல ரெடுத்தரற்ற வுள்ளாய்நீ துறத்தலிற்
கூருந்தன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற்
காரிகை பெற்றதன் கவின்வாடக் கலுழ்பாங்கே
பீரல ரணிகொண்ட பிறைநுத லல்லாக்கால்;
9இணைபிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலிற்
புணையில்லா வெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற்
றுணையாருட் டகைபெற்ற தொன்னல மிழந்தினி
யணிவனப் பிழந்ததன் னணைமென்றோ ளல்லாக்கால்;
13இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலி
னின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன்
வென்றவே னுதியேய்க்கும் விறனல னிழந்தினி
நின்றுநீ ருகக்கலுழு நெடும்பெருங்க ணல்லாக்கால்;
17

அதனால்;

பிரிவில்லாய் போலநீ தெய்வத்திற் றெளித்தக்கா
லரிதென்னா டுணிந்தவ ளாய்நலம் பெயர்தரப்
புரியுளைக் கலிமான்றேர் கடவுபு
விரிதண்டார் வியன்மார்ப விரைகநின் செலவே.

இது “வெளிப்பட வரைதல் படாமை வரைதலெள், றாயிரண்டென்ப வரைத லாறே” (1) என்பதனாற் களவு வெளிப்பட்டபின் வரையாது பொருள்வயிற் பிரிந்துவந்தானைத் தோழி எதிர்ப்பட்டுநின்று தலைவியது ஆற்றாமை கூறி வரைவுகடாயது.

இதன் பொருள்.


1. தொல். கள. சூ. 49.