பக்கம் எண் :

778கலித்தொகை

அதனால் விரைகவென்க. ஆய்நலம் - நுணுகியநலம்.

இதனால், தலைவற்குப் புணர்ச்சியுவகை பிறந்தது.

இது (1) 1நான்கடியே நான்கடித் தரவிற்கு மரபென்றதனாற் கொண்ட நான்கடித் தாழிசையும் நடைநவிலாது பொருள்பெற்ற தனிச்சொல்லும் தரவியலொத்து இறுதிநிலையுரைத்த சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. எ-று.

125

கண்டவ ரில்லென வுலகத்து ளுணராதார்
தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளு
ணெஞ்சறிந்த கொடியவை மறைப்பினு மறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை யாகவின்
வண்பரி நவின்ற வயமான் செல்வ
நன்கதை யறியினு நயனில்லா நாட்டத்தா
லன்பிலை யெனவந்து கழறுவ லையகேள்;

8

மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூ ழிளமுலை
முகிழ்செய முள்கிய தொடர்பவ ளுண்க
யிமிழ்திரைக் கொண்க கொடியை காணீ;

12

இலங்கே ரெல்வளை யேர்தழை தைஇ
நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப்


1. (அ) “இடைநிலைப்பாட்டே, தரவகப்பட்ட மரபின தென்ப” என்னும் தொல். செய். 134 - ஆம் சூத்திரவுரையில் ‘தரவிற் சுருங்கு மென்னாது அகப்படுமென்றான், தரவோடு ஒத்து வருந் தாழிசை என்பதூஉங் கோடற்கு. என்னை? மக்களகத்துப் பிறந்தான் என்றவழி அச்சாதியோடொக்கப் பிறந்தானென்பது படுமாகலின்’ என்றுகூறி, அதற்கும் தொல். செய். 137 - ஆம் சூத்திரவுரையில் அளவியலாற் சுரிதகமொத்ததென்பதற்கும் இச்செய்யுளை மேற்கோள் காட்டுவர் பேராசிரியர். (ஆ) நச்சினார்க்கினியர் தொல். செய். 137 - ஆம் சூத்திரவுரையில், ‘இது நாலடி யிழிபாகிய நான்கடித்தரவிற்கு மரபென்ற இலேசாற்கொண்டநான்கடித்தாழிசை தம்முள் அளவொத்து வந்து நடை நவிலாது பொருள்பெற்ற தனிச்சொல்லும்பெற்றுத் தரவியலொத்து இறுதிநிலை யுரைத்த சுரிதகமும்பெற்ற வொத்தாழிசைக்கலிப்பா’ என்று இங்குள்ள செய்தியையே தெளிவாக எழுதியிருக்கிறார்.

(பிரதிபேதம்) 1நான்கடிபோய நான்கடித்.