பக்கம் எண் :

798கலித்தொகை

இதனால், (1) கனவொடு மயங்கலென்னும் மெய்ப்பாடு தலைவிக்குத் தோன்றிற்று.

இஃது “இடைநிலைப்பாட்டு” (2) என்றதனால் தாழம்பட்ட ஓசையின்றி வந்த இடைநிலைப்பாட்டுப் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலிப்பா. (11)

(129)தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற்
பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போ
லெல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பி
னல்லது மலைந் திருந்தறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போன் மயங்கிரு டலைவர
வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை;
8பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கட
றூவறத் துறந்தனன் றுறைவனென் றவன்றிற
நோய்தெற வுழப்பார்க் ணிமிழ்தியோ வெம்போலக்
காதல்செய் தகன்றாரை யுடையையோ, நீ;
12மன்றிரும் பெண்ணை மடல்சே ரன்றி
னன்றறை கொன்றன ரவரெனக் கலங்கிய
வென்றுய ரறிந்தனை நாறியோ வெம்போல
வின்றுணைப் பிரிந்தாரை யுடையையோ நீ;
19பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழ
லினிவரி னுயருமற் பழியெனக் கலங்கிய
தனியவ ரிடும்பைகண் டினைதியோ வெம்போல
வினியசெய் தகன்றாரை யுடையையோ நீ;

எனவாங்கு;

21அழிந்தய லறிந்த வெவ்வ மேற்படப்
பெரும்பே துறுதல் களைமதி பெரும

1. இம்மெய்ப்பாட்டுக்கே “அலந்தாங்..........அளிப்பான் போலவும்” என்பது மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கிறது; தொல். மெய்ப். சூ. 22. பேரா. இ - வி. 580.

2. தொல். செய். சூ. 132.