காரியத்தைக் கெடுக்குமதிலும் கொடிதுகா ணென அவளாற்றாமையைத் தோழி கூறி வரைவுகடாயினாள். எ - று. இது "காமஞ்சிறப்பினும்" (1) என்பதனாற்கொள்க. இதனால், தலைவற்குச் சூழ்ச்சி பிறந்தது. (2) இதுவும் காலம்மயங்கிற்று. செல்லறீரத் திறனறியொருவன் என்பதும் பாடம். இது நீ நீ நீ என ஓரசைச்சீர் வந்து ஐஞ்சீரடிவந்த 1மண்டிலவாசிரியத்தானிற்று யாப்பின்வேறுபட்ட கொச்சகம். (12) (130) | நயனும் வாய்மையு நன்னர் நடுவு மிவனிற் றோன்றிய விவையென விரங்கப் புரைதவ நாடிப் பொய்தபுத் தினிதாண்ட வரைசனோ டுடன்மாய்ந்த நல்லூழிச் செல்வம்போ னிரைகதிர்க் கனலி பாடொடு பகல்செலக் கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போற் புல்லிருள் பரத்தரூஉம் புலம்புகொண் மருண்மாலை; | 8 | இம்மாலை; ஐய ரவிரழ லெடுப்ப வரோவென் கையறு நெஞ்சங் கனன்றுதீ மடுக்கும்; | 11 | இம்மாலை; இருங்கழி மாமலர் கூம்ப வரோவென் னரும்படர் நெஞ்ச மழிவொடு கூம்பும்; | 14 | இம்மாலை; கோவலர் தீங்குழ லினைய வரோவென் பூவெழி லுண்கண் புலம்புகொண் டினையும்; |
1. தொல். கள. சூ. 20. 2. (அ) முதற்பொருள்களுள் காலம்மயங்கிவருமென்பதற்கு இச்செய்யுளை மேற்கோள்காட்டுவர் இளம்பூரணர்; தொல். அகத். சூ. 14 ‘திணை மயங்கு’(ஆ) நச்சினார்க்கினியரும் அச்சூத்திரவுரையில் “தொல்லூழி ...........வினியசெய் தகன்றாரை யுடையையோ நீ” என்னுமடிகளை மேற்கோள்காட்டி ‘நெய்தற்கலியுட் கங்குலும் மாலையும் முன்பனியும் (பிரதிபேதம்) 1மண்டலவாசிரியத்தான்.
|