(132). | உரவுநீர்த் திரைபொர வோங்கிய வெக்கர்மேல் விரவுப்பல் லுருவின வீழ்பெடை துணையாக விரைதேர்ந்துண் டசாவிடூஉம் புள்ளின மிறைகொள முரைசுமூன் றாள்பவர் முரணியோர் முரண்டப நிரைகளி றிடைபட நெறியாத்த விருக்கைபோற் சிதைவின்றிச் சென்றுழிச் சிறப்பெய்தி வினைவாய்த்துத் துறையகலம் வாய்சூழந் துணிகடற் றண்சேர்ப்ப; | 8 | புன்னையநறும்பொழிற் புணர்ந்தனை யிருந்தக்கா னன்னுதா லஞ்சலோம் பென்றதன் பயனன்றோ பாயின பசலையாற் பகற்கொண்ட சுடர்போன்றாண் மாவின தளிர்போலு மாணல மிழந்ததை; | 12 | பன்மலர்நறும்பொழிற் பழியின்றிப் புணர்ந்தக்காற் சின்மொழி தெளியெனத் தேற்றியசிறப்பன்றோ வாடுபு வனப்போடி வயக்குறா மணிபோன்றோ ணீடிறை நெடுமென்றோ ணிரைவளை நெகிழ்ந்ததை; | 16 | அடும்பிவரணியெக்க ராடிநீ தணந்தக்காற் கொடுங்குழாய் தெளியெனக் கொண்டதன் கொளையன்றோ பொறையாற்றா நுசுப்பினாற் பூவீந்த கொடிபோன்றாண் மறைபிற ரறியாமை மாணாநோ யுழப்பதை; எனவாங்கு; | 21 | வழிபட்டதெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கட் கழியுநோய்கைம்மிக வணங்காகி யதுபோலப் பழிபரந் தலர்தூற்ற வென்றோழி யழிபட ரலைப்ப வகறலோ கொடிதே. |
இது வரைவு நீட்டித்துழிப் பகற்குறிவந்து நீங்குந் தலைவனை எதிர்ப்பட்டுத் தோழி, அவனை நாணு நெஞ்சலைப்ப வரைவுகடாயது. இதன் பொருள். (1) உரவுநீர்த் திரைபொர வோங்கிய வெக்கர்மேல் விரவுப்பல் லுருவின வீழ்பெடை துணையாக
1. உரவுநீர். இந்நூற்பாக்கம் 791 : 4-ஆம் குறிப்புப்பார்க்க.
|