சிறுதாயம் இட்டவன் மனம்போலே ஆக்கம்1பெருகினவள், நீ பிரிந்து வந்து வரைவேனென்று எமக்கறிவித்துப் பிரியக் கருதின நின்பொருட்டு அக்கவறு இருகாற் சிறுதாயம் இட வேண்டின அளவிலே ஒருகாற் சிறுதாயம் இடப்பட்டவனைப்போலே செறிந்த துயரிலே அழுந்தவோ? எ - று. இது 2தகவாகாது காணெனக் கூறிப் பின்னும். ஆங்கு, அசை. 18 (1) கொண்டு 3பலர்தூற்றங் கௌவை யஞ்சாய் தீண்டற் கருளித் திறனறிந் தெழீஇப் பாண்டியஞ் செய்வான் பொருளினு மீண்டுக விவணல மேறுக தேரே எ - து: நீ பலரும் மேற்கொண்டு தூற்றும் அலருக்கு அஞ்சாய்; இதனைக் கைவிட்டு இவளை வரைந்துகொண்டு கூடுதற்கு அருள்பண்ணி, அதற்காந்திறத்தை அறிந்து எழுந்திருந்து தேரை ஏறுவாயாக; அங்ஙனம் வரைந்தால் 4இவள்நலம் உழவாடியாகி யிருப்பானி[ருவரி]டத்துப் பெரும்பொருளினும் ஈண்டுவதாக என வரைவுகடாயினாள். எ - று. இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது. இஃது ஒத்தாழிசைக்கலி. (137). | அரிதே தோழிநா ணிறுப்பாமென் றுணர்தல் பெரிதே காமமென் னுயிர்தவச் சிறிதே பலவே யாமம் பையுளு முடைய சிலவே நம்மோ டுசாவு மன்றி லழலவிர் வயங்கிழை யொலிப்ப வுலமந் தெழிலெஞ்சு மயிலி னடுங்கிச் சேக்கையி னழலா கின்றவர் நக்கதன் பயனே; | 8 | மெல்லியநெஞ்சு பையுள் கூரத்தஞ் சொல்லினா னெய்தமை யல்ல தவர்நம்மை வல்லவன் றைஇய வாக்கமை கடுவிசை |
‘விருத்தம்’ என வழங்கும் சொல்லின் சிதைவுபோலும்; அன்றி வித்தென்பது அம்சாரியை பெற்றுவந்ததெனினும் இயையும்; வித்தாயமென இச்செய்யுளுள் வருதலும் நோக்குக. 1. எதுகை நோக்கி ‘கோண்டு’ எனக்கொள்ளின், நீட்டல் விகாரமாம். (பிரதிபேதம்)1பெருகினவளணீபிரிந்து, 2தாவகதாது, தாவாகாது, 3 பழிதூற்றும் 4இவணலமும் வாடியாகி யிருப்பாளிருவரிடத்தும் பெறும் பொருளினுமீண்டுவதாக
|