பக்கம் எண் :

862கலித்தொகை

றடங்கருந் தோற்றத் தருந் (1) தவ 1முயன்றோர்தம்
முடம்பொழித் துயருல கினிதுபெற் றாங்கே

எ - து: இப்படி இப்படி யான்பாட அன்புறுகிளவியாள் அதனைக்கேட்டு அருள்பண்ணி அதன் மேலே அன்புற்று வந்து என்னை அளிக்கையினாலே, மனவேட்கை அடங்கின அரிய விளக்கத்தையுடைய செய்தற்கரிய தவத்தை முயன்றோர் தம்முடம்பை இவ்வுலகிலேபோகட்டுச் சுவர்க்கத்தை 2இனிதாகப் பெற்றாற்போல, துன்பத்திற்குத் துணையாய் நின்ற மடல் இனி 3இவளைப் பெறும்படியாக இன்பத்துக்கு இடம்படக்கடவா (?) னென்று இரங்கினா 4ளென்றான். எ - று.

இது பூளையாவிரை எனத் தளைவிரவின, பாட்டிடைமிடைந்த, ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய்பெற்றும் வாராது தரவும்போக்கும் வந்த, கலிவெண்பாட்டு. (21)

(139). சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்
பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல்
சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த
சான்றீ ருமக்கொன் றறிவுறுப்பேன் மான்ற
துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி
யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென்
னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சே
னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப

1. (அ) ‘‘உடம்பொழிய வேண்டி னுயர்தவ மாற்று’’ (ஆ) ‘‘தவத்தாற் சுவர்க்கமாம்’’ சிறுபஞ்ச. 6: 36. (இ) ‘‘சுவர்க்கந் தவத்தால்’’ ஏலாதி. 77. (ஈ) “ஒழுக்கிய லருந்தவத் துடம்பு நீங்கினா, ரழிப்பரும் பொன்னுடம் படைந்த தொப்பவே’’ சீவக. 325. (உ) “புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்க மென்னுமீ தருமறைப் பொருளே’’ கம்ப. நகரப். 5 என்பவையும் (ஊ) ‘‘தவஞ்செய் மாக்க டம்முடம் பிடாஅ, ததன்பய மெய்திய வளவை மான’’ பொருந. 91 - 92. (எ) ‘‘உடம்பொடு துறக்கநக ருற்றவரை யொத்தார்’’ (ஏ) ‘‘உறையும் விண்ணக முடலொடு மெய்தின ரொத்தார்’’ (ஐ) ‘‘துறந்த செல்வ னினையத் துறக்கந்தான், பறந்து வந்து படிந்தது பல்சனர், பிறந்து வேறொ ருலகுபெற் றாரென, மறந்து வைகினர் முன்னைத்தம் வாழ்வெலாம்’’ (ஒ) ‘‘மெய்யி னோடருந் துறக்கமுற் றாரென’’ கம்ப. கடிமணப். 1. மந்திர. 75. கிளைகண்டு நீங்கு. 7. மீட்சி. 154. என்பவையும் இங்கே அறிதற்பாலன.

(பிரதிபேதம்)1முயன்றோருடம், 2இனிதாற்பெற்றாற், 3இவள் பெறும்படியாக, 4என்றாள்.