தமர் குடிப்பழுதாமென்று அஞ்சி அவளை அவ்விடத்தே கொடுத்தார்; ஈதோர் மகட்கொடை இருந்தவாறென்னெனக் கண்டார் வியந்து கூறினார். எ - று. இது கண்டார்க்குக் கொடைபற்றிய பெருமிதம் பிறந்தது. இது ‘‘தரவும்போக்கும்’’ (1) என்பதனுட்பாட்டினைப் போக்கின் பின் வைத்ததனாற் போக்குப்பெற்ற, பண்பு என 1நாற்சீரான் இயன்ற பாட்டு வந்தது. (2) வாழிசான்றீர் அம்மசான்றீர், என ஈற்றுக்கண் வந்த சீர்களை 2முதல் அடிக்கு ஆண்டபொருண்முடிவுள் மாறுகூட்டி அடுக்க அறுசீராய் ஆறுமெய்பெற்றமையிற் கலிவெண்பா. (24) (142). | புரிவுண்ட புணர்ச்சியுட் (3) புல்லாரா மாத்திரை யருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கட் (4) செயநின்ற பண்ணினுட் செவிசுவை கொள்ளாது நயநின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும் | 5 | பயனின்று மன்றம்ம காம மிவண்மன்னு |
1. தொல். செய். சூ. 154. இதனுரையில், ‘‘தரவும்போக்கும் பாட்டிடைமிடைந்தும்’’ என, ‘‘பாட்டினைப் போக்கின்பின் வைத்ததனாற் போக்குப் போல நாற்சீரானிறுவனவும் அப்பாட்டுள் அமையுமென்பது; அது, ‘கரந்தாங்கே..... பண்பு’ என்றாற்போல வரும்’’ என்று பேராசிரியரும் இதனையே தழுவி நச்சினார்க்கினியரும் எழுதியிருக்கிறார்கள். 2. இச்செய்யுளுள், ‘வாழிசான்றீர், அம்மசான்றீர், என ஐஞ்சீரடுக்கியாங்கு அடுக்கிச் சொல்ல அறுசீராயின. இதற்கும் ஐஞ்சீர் அடுக்கியுமென்றதுபோல அறுசீரடுக்கியுமென்று அடுக்குதற்குத் தொழில் கொள்ளப்படும். ஈண்டு இரண்டளவடி தொடைப்படச் செய்தமையினென்க. இதனுள் என்றாங்கே என்பது தனிச்சொல்’ என்று பேராசிரியரும், இதனுள் ‘வாழி சான்றீர், அம்ம சான்றீர், என ஈற்றுக்கண் வந்த சீர்களை முதலடிக்கட் பொருண்முடியுமாறு கூட்டி ஐஞ்சீரடுக்கி யாங் கடுக்க அறுசீரானவ்வாறு வந்ததாம். இதற்கும் அறுசீரடுக்கியும் எனக் கூட்டிப் பொருளுரைக்க. என்றாங்கு தனிச்சொல்’ என்று நச்சினார்க்கினியரும் எழுதியிருப்பவை இங்கே அறிதற்பாலன; தொல். செய். சூ. 154. 3. ‘‘புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பிய வென்றோழி’’ கலி. 45 : 10. 4. ‘‘செயநின்ற......மன்றம்ம காமம்’’ என்பதை (நன். இடை. சூ. 19. உரையில்) மேற்கோள்காட்டி அம்ம, உரையசையென்று மயிலைநாதரும் இப்பகுதியையே (இ - வி. சூ. 274 உரையில்) மேற்கோள்காட்டி அம்ம, அசைநிலையென்று இ-வி. நூலாரும் கூறுவர். (பிரதிபேதம்)1நாற்சீரானின்றபாட்டு, 2முதலாடிக்காண்ட.
|