ணினைந்துநீ டுயிர்த்தனள், எனவும் இயற்சீர் நிரை ஒன்றியும் 1பாவேறுபட்டு எல்லையுமிரவுங் கழிந்தனவென்றெண்ணி 2யெல்லிரா’ என ஐஞ்சீரடிவந்த வெள்ளைச் 3சுரிதகம்பெற்ற கலிவெண்பாட்டு. (25) (143). | அகலாங்க ணிருணீங்கி யணிநிலாத் திகழ்ந்தபிற் பகலாங்கட் பையென்ற மதியம்போ னகலின்று நன்னுத னீத்த திலகத்தண் மின்னி மணிபொரு பசும்பொன்கொன் மாவீன்ற தளிரின்மேற் | 5 | கணிகாரங் கொட்குங்கொ லென்றாங் கணிசெல மேனி மறைத்த பசலைய ளானாது நெஞ்சம் வெறியா நினையா நிலனோக்கா வஞ்சா வழாஅ வரற்றா விஃதொத்தி யென்செய்தாள் கொல்லென்பீர் கேட்டீமின் பொன்செய்தேன்; | 10 | மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைகொன்று மற்றத னாருயி ரெஞ்சப் பறையறைந் தாங்கொருவ னீத்தா னவனை யறைநவ நாட்டினீர் கொண்டுதரின் யானு நிறையுடையே னாகுவேன் மன்ற மறையினென் மென்றோ ணெகிழ்த்தானை மேஎ யவனாங்கட் சென்றுசேட் பட்டதென் னெஞ்சு; | 17 | ஒன்றி முயங்குமென் றென்பின் வருதிர்மற் றாங்கே யுயங்கினா ளென்றாங் குசாதிர்மற் றந்தோ மயங்கினா ளென்று மருடிர் கலங்கன்மி |
(ஆ) ‘‘புரிவுண்ட என்னும் நெய்தற்கலி[யுள,்] ‘புரிவுண்ட புணர்ச்சியுள்’ எனக் கலித்தளையும்வந்து ‘புல்லாரா மாத்திரை, யருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கண்’ எனவும், ‘இணைந்து நொந்தழுதனணினைந்து நீடுயிர்த் தனள்’ எனவும் இயற்சீர் நிரையாயன்றியும் பாவேறுபட்டு ‘எல்லையு மிரவுங் கழிந்தனவென் றெண்ணி யெல்லிரா, நல்கிய கேள்வனிவன்மன்ற மெல்ல’ என ஐஞ்சீரடிவந்த வெள்ளைச்சுரிதகமும் பெற்ற கலிவெண்பாட்டு’’ என்று நச்சினார்க்கினியருரையிலும் உள்ள குறிப்புக்கள் இங்கே ஆராய்தற்பாலன; தொல். செய். சூ. 154. நச். (பிரதிபேதம்)1பாவேறுபடாமையின் எல்லையு, 2எல்லீராவென, 3சுரிதகமும் பெற்ற.
|