பக்கம் எண் :

906கலித்தொகை

தன்னுயிரைப் பாதுகாக்குமாறு போல உலகத்துப் (1) பெரிய உயிர்களை எல்லாம் தழீஇப்பாதுகாக்கும் இம்மன்னனும் எனக்கினிய உயிரை ஒப்பானைக் காட்டி என்னுயிரைச் சிறிதொன்றுங் காவாதிருக்கின்ற தன்மை என்னபயனைக் கருதியோ 1வென்றுங் கூறினாளென்று கூறும்படியாக நிலைபெற்றகாமநோயாலே 2அங்ஙனம் மயக்கங்கொண்ட மனத்தையுடையவள் பலமலைகளைக் கடந்துபோனவன் வரைவொடுவந்து பணிந்து தன்னடியைச் சேர்கையினாலே பாண்டியனை உறவாக அவன் மனத்தைத் தெளிவித்த தேயத்திலுள்ளவர் இன்பமுற்று வாழுமாறுபோல அவனால் இழந்த நலத்தை 3இனிய அகமகிழ்ச்சியோடு எய்தினள்; இஃதென்னவியப்போஎனக் கண்டார்கெண்டு கூறிற்றாக உரைக்க. எ - று.

‘சென்றுசேட்பட்ட தென்னெஞ்சு’ என்னுந் துணையும் கூறத்தகாதன கூறலின் மடனிறந்தவாறும் ‘நெடுமென்றோள்’ ‘நீரலர் நீலம்’ ‘இளமுலை’ என்பனவற்றான் மிகுதியிறந்தவாறும் ‘வழிபட் டிரக்குவேன் வந்தேன்’ என்(பதனால்) வருத்தமிறந்தவாறும் யாண்டுமுடையே னிசை’ என்பதனால் வியவாமையின் மருட்கையிறந்தவாறும் உணர்க.

இது கண்டார்க்கு 4அவளாக்கங்கண்டு மருட்கை பிறந்தது.

நெய்தனெறித்தல் முதலியன (2) திருவினாற் காமக்குறிப்புப்பிறந்த ஒப்பு; இவை குடிப்பிறப்பினை அறிவித்துக் காமக் குறிப்பினை நிகழ்த்தலின்.

இஃது ஐஞ்சீரடுக்கிவந்த கலிவெண்பாட்டு. (26)

(144). நன்னுதால் காண்டை நினையா நெடிதுயிரா
வென்னுற்றாள் கொல்லோ விஃதொத்தி பன்மா
ணகுதருந் தன்னாணுக் கைவிட் டிகுதருங்
கண்ணீர் துடையாக் கவிழ்ந்து நிலனோக்கி
5. யன்ன விடும்பை பலசெய்து தன்னை
வினவுவார்க் கேதில சொல்லிக் கனவுபோற்
றெருளு மருளு மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ சென்று

1. ‘‘பெரியத னாவி பெரிது’’ பழமொழி. 1.

2. ‘‘நெய்தனெறிக்கவும்........றேளாள் பவ னென்பது திருவினாற் காமக்குறிப்புப் பிறந்தவாறு; என்னை? இனையன வல்லனாதல் செல்வக்குடிப்பிறந்தாரை அறிவிக்குமாகலின்; அது காமக்குறிப்பினை நிகழ்த்துமென்பது. இது தலைமகட்கும் ஒக்கும்’’ என்பது தொல். மெய்ப். சூ. 25. பேராசிரிய ருரையிலும் காணப் படுகின்றது.

(பிரதிபேதம்)1என்று கூறினாள், 2இங்ஙனம், 3இனியமகிட்சி, 4அவராக்கம் பிறந்தது மருட்கை.