புள்ளிற் கதுபொழிந் தாஅங்கு மற்றுத்தன் னல்லெழின் மார்பன் முயங்கலி னல்ல றீர்ந்தன் றாயிழை பண்பே எ - து: என்று அவ்விடத்தே சொல்லாநிற்க, கோடைக்கால மிக்க வானத்திடத்தே மேகத்தினது வளவிய துளியைப் பெறுதற்குச் சுழன்று திரியும் வானம்பாடிக்கு அம்மேகம் பெய்தாற்போலத் தன்னுடைய நல்ல அழகையுடைய மார்பன் அருளுதலுற்று வந்து முயங்குகையினாலே ஆயிழையுடைய அல்லலாகிய குணம் போயிற்று; என்று கண்டார் வியந்து தம்மிற் கொண்டுகூறிற்றாக உரைக்க. இது, கண்டார்க்கு அவராக்கங் கண்டு மருட்கை பிறந்தது. ‘என்மே னிலைஇய நோய்’ என்னுந் துணையும் கூறத் தகாதன கூறலின் மடனிறந்தவாறும், 1‘இழந்திலேன்மன்னோ’ என வருத்தந் தோன்றாமற் கூறலின் வருத்தமிறந்தவாறும் ‘ஞாயிற்றை நாடென்றேன்’ என்றதனைத் தான் வியவாமை யின் மருட்கையிறந்தவாறும் ‘என்னாணு நலனும்’ என்றும் மான் பிணைபோன்ற யான் இப்பொழுது ‘மருள்கூர் பிணைபோன் மயங்க’ என்றும் வனப்புமிகுதி கூறலின் மிகுதியிறந்தவாறுங் காண்க. இஃது ஐஞ்சீரடிவந்ததரவும் ஐஞ்சீரடுக்கிய இடைநிலைப்பாட்டும் ‘என வாங்குப்பாடவருளுற்று’ என முச்சீரான் வந்த சொற்சீரடியும் வந்து ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற கலிவெண்பாட்டு. (21) (147). | ஆறல்ல மொழிதோற்றி யறவினை கலக்கிய தேறுக ணறவுண்டார் மயக்கம்போற் காமம் வேறொருபாற் றானது கொல்லோ சீறடிச் சிலம்பார்ப்ப வியலியா ளிவண்மன்னோ வினிமன்னும் | 5 | புலம்பூரப் புல்லென்ற வனப்பினாள் விலங்காக வேனுதி யுறநோக்கி வெயிலுற வுருகுந்தன் றோணல முண்டானைக் கெடுத்தாள்போற் றெருவிற்பட் டூண்யாது மிலளாகி யுயிரினுஞ் சிறந்ததன் னாண்யாது மிலளாகி நகுதலு நகூஉ மாங்கே | 10 | பெண்மையு மிலளாகி யழுதலு மழுஉந் தோழியோ ரொண்ணுத லுற்ற துழைச்சென்று கேளாமோ; |
விநாயக. மகோற் கடர். 799. (அஅ) "மழைமுகி லடுப்பச் சாதகக் குருகு வாஞ்சையிற் றுளிமடுத்தாங்கு" திருவானைக்காப். தீர்த்த. 30. என்பவற்றால் அறிக. (பிரதிபேதம்)1இழிந்திலேன்.
|