பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்953

1எ - து: திருந்தின இழையினையுடைய மடப்பம் வருதலையுடையவள் வருந்தியவிடத்தே தூரிய நிலத்தே உறைகின்ற காதலர் பகைவரிடத்துச் செய்யும் போர்த்தொழில்களைப் போய் முடித்து அவர்மண்ணைக் கைக்கொண்டு பரந்த இருட்பரப்பினை ஞாயிறு போக்கினாற்போல அவள் வருத்தம் நீங்கவந்தார்; இஃது என்னவியப்போ எனக் கண்டார்கூறியதாக உரைக்க. எ - று.

இது, கண்டார்க்கு 2அவர் ஆக்கங்கண்டு மருட்கை பிறந்தது.

"தானே சேறலுந் தன்னொடு சிவணிய, வேனோர் சேறலும் வேந்தன் மேற்றே’’ (1) என்பதனால், முடியுடைவேந்தன் தன் பகைமேற் சென்று மண் கோடல் உரித்து என்றதனானும், வாளாணெதிரும் பிரிவு முடியுடை வேந்தர்க்குச் சிறுபான்மையென்றும் அவர் ஏவப்பிரியும் அரசர்க்குப் பெரும் பான்மையென் றுங் கூறலானும், "வெளிப்படை தானே கற்பினொ டொப்பினு, ஞாங்கர்க் 3கிளந்த மூன்றுபொருளாக, வரையாது பிரிதல், 4கிழவோற்கில்லை’’ (2)என்றதனான் வரைவிடைவைத்து மண்கோடற்குப்பிரிதலிலையென்று அதனை விலக்கினமை யானும் கண்டார் களவிற்கூறுதலின்மையானும், இப்பாட்டும் 5அவள் மிகவும் வருத்தம் எய்தின நிலைமையைனக்கண்டு வருந்தினோர் அவன் வந்து கூட வருத்தம் நீங்கினமை கண்டு வியந்து கூறிய பெருந்திணையாம்.

இதுவும் இடையிடை சொற்சீரடிவந்து எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றிய கொச்சகம். (31)

(149). நிரைதிமில் களிறாகத் திரையொலி பறையாகக்
கரைசேர் புள்ளினத் தஞ்சிறை படையாக
வரைசுகால் கிளர்ந்தன்ன வுரவுநீர்ச் சேர்ப்பகேள்;
கற்பித்தா னெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் விச்சைக்கட்
டப்பித்தான் பொருளேபோற் றமியவே தேயுமா
லொற்கத்து ளுதவியார்க் குதவாதான் மற்றவ
னெச்சத்து ளாயினும்ஃ தெறியாது விடாதேகாண்;
கேளிர்க ணெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்க
டாளிலான் குடியேபோற் றமியவே தேயுமாற்
சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின் மற்றவன்
வாள்வாய்நன் றாயினுமஃ தெறியாது விடாதேகாண்;
ஆங்கு;

1. தொல். அகத். சூ. 27.

2. தொல். களவியல். சூ. 50.

(பிரதிபேதம்)1எ - து : என்று சொல்லித் திருந்தின, 2அவளாக்கங், 3கிளர்ந்த, 4கிழவற்கில்லை, 5இவள் மிகவும்.