பக்கம் எண் :

558

“துன்னி.........உணராவென அகரம் வினைக்குறிப்புப்பற்றி வருவனவும்” (தொல்.வினை. சூ. 31, .)

21.பாடன்மார் - பாடுதலைத் தவிர்வாராக ; தொல்.வினை. சூ. 10,கல்,; ந. மேற்.

20 - 21. தொல்.வினை. சூ. 10, சே.; இ - வி. சூ. 232, 239, உரை,மேற்.

19 - 21. தொல்.இடை. சூ. 8, கல்.;நன். சூ. 326, மயிலை ; நன். வி.சூ. 327, மேற்.

(375)

376

விசும்புநீத்த மிறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகியசிவந்துவாங் கந்தி
சிறுநனி பிறந்த பின்றைச்செறிபிணிச்
சிதாஅர் வள்பினென் றெடாரிதழீஇப்
5பாண ராரு மளவையான்றன்
யாணர் நன்மனைக் கூட்டுமுத னின்றனென்
இமைத்தோர் விழித்த மாத்திரைஞெரேரெனக்
குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்றப்
பண்டறி வாரா வுருவோடென்னரைத்
10தொன்றுபடுதுளையொடு பருவிழை போகி
நைந்துகரை பறைந்தவென்னுடையு நோக்கி
விருந்தின னளிய னிவனெனப்பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி நன்றும்
அரவுவெகுண்டன்ன தேறலொடு சூடுதருபு
15நிரயத்தன்னவென் வறன்களைந் தன்றே
இரவி னானே யீத்தோனெந்தை
அன்றை ஞான்றினொ டின்றி னூங்கும்
இரப்பச் சிந்தியேனிரப்படு புணையின்
உளத்தி னளக்கு மிளிர்ந்ததகையேன்
20நிறைக்குளப் புதவின்மகிழ்ந்தனெ னாகி
ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர்கடைத்தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல்செல்லாதென் சிறுகிணைக் குரலே.

(பி - ம்.) 1 ‘விசும்பினீத்தமிறந்த’, ‘விசும்பிணியத்தமிறந்த’ 2 ‘மழுங்கிய’, ‘பழுனிய’, ‘மழகிய’, 2 - 3 ‘கந்திச்சிறுநனியிறந்த’ 4 ‘சிதாஅவளபின்’ 6 ‘பாணர்நன்.................நினறென’ 8 ‘மறையிருள்’ 10 ’போக்கி’ 13 ’மூரற்கைமிக்குநன்று’ 15 ‘வறங்’ 17 ‘நான்றினொடு’