பக்கம் எண் :

560

20. நிறைக்குளப்புதவு - நீர்நிறைந்திருத்தலையுடைய குளத்தின்வாய்த்தலை ; புறநா.24 : 19.

21. இரவலர் வரையா - யாசகரை நீக்காத. வள்ளியோர் -வரையாது கொடுப்போர். கடைத்தலை - தலைவாயில்.

22. ஞாங்கர் - பக்கம். நெடுமொழி - தனது மேம்பாட்டைக்கூறுமொழி.

18 - 23. இவ்வடிகளின் பொருள், "செருமானவேற்சென்னி தென்னுறந்தை யார்தம், பெருமான் முகம்பார்த்தபின்னர் - ஒருநாளும், பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாம்,காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்" (தண்டி. சூ. 21, உரை,மேற்.) என்னும் வெண்பாவை நினைப்பிக்கின்றது.

மு. புறநா. 68 : 19, 148.

(376)

377

பனிபழுனியபல்யாமத்துப்
பாறுதலை மயிர்நனைய
இனிது துஞ்சுந் திருநகர்வரைப்பின்
இனைய லகற்றவென் கிணைதொடாக்குறுகி
5அவியுணவினோர் புறங்காப்ப
அறநெஞ்சத்தோன்வாழநாளென்
றதற்கொண்டு வரலேத்திக்
கரவில்லாக்கவிவண்கையான்
வாழ்கவெனப் பெயர்பெற்றோர்
10பிறர்க்குவமந்தானல்லது
தனக்குவமம் பிறரில்லென
அதுநினைந்துமதிமழுகி
ஆங்குநின்ற வெற்காணூஉச்
சேய்நாட்டுச்செல்கிணைஞனை
15நீபுரவலையெமக்கென்ன
மலைபயந்த மணியுங் கடறுபயந்தபொன்னும்
கடல்பயந்த கதிர்முத்தமும்
வேறுபட்ட வுடையுஞ்சேறுபட்ட தசும்பும்
கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
20நனவினல்கியோ னசைசா றோன்றல்
நாடென மொழிவோரவனாடென மொழிவோர்
வேந்தென மொழிவோரவன்வேந்தென மொழிவோர்
........................... பொற்கோட்டியானையர்