பக்கம் எண் :

562

23. பொன் - கிம்புரி; ஆகுபெயர்.

24.கவர்பரி - பகுந்து விரையும் செலவு : "கவர்பரிப்புரவியர்" (சிலப். 5 : 159) . மான் - குதிரை.

27.கதழிசை - விரைதல் பொருந்திய.

28. வாளின்வாழ்நர் - வாள்வீரர்.

30. மன்னியநெடிது - நெடுங்காலம் வாழ்வானாக.

(377)

378

தென்பரதவர்மிடல்சாய
வடவடுகர் வாளோட்டிய
தொடையமைகண்ணித் திருந்துவேற் றடக்கைக்
கடுமா கடைஇயவிடுபரி வடிம்பின்
5நற்றார்க் கள்ளின்சோழன் கோயிற்
புதுப்பிறை யன்ன சுதைசெய்மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென்
அரிக்கூடு மாக்கிணை யிரியவொற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
10எமக்கென வகுத்தவல்ல மிகப்பல
மேம்படு சிறப்பி னருங்கலவெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்
டிலம்பாடுழந்தவென் னிரும்பே ரொக்கல்
விரற்செறிமரபின செவித்தொடக் குநரும்
15செவித்தொடர்மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபினமிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின வரைக்கியாக் குநரும்
கடுந்தெற லிராமனுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
20நிலஞ்சேர்மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளையிழைப்பொலிந் தாஅங்
கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமையெய்தி
அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே.

(பி - ம்.) 3 ‘தொடையமைக்கண்ணி’ 4 ‘குடைஇய’, ‘வடிம்பினறறைக்கிளளிசொழர்’ 10 ‘வகுதகுவல்ல’ 11 ‘னழுங்கலவெறுக்கை’ 15 ‘விரறசெறிகுநருஞ’ 16 ‘மனக்கமைமரபினமிடறு’ 18 ‘கடுந்தேர்’ 19 - 20 ‘ஞான்றுநிலஞ்’ 21 ‘மிழைப்பொலிந்’ 22 ‘வருநதை’ 23 ‘கிணைத்தலைமை’