பக்கம் எண் :

564

16. அரை - இடை. யாக்குநர் - கட்டுகின்றவர்.மிடறு - கழுத்து.

18. வடசொற் சிதைந்துபொருத்தமுடையனவாகச் சான்றோர் செய்யுளில் வந்ததற்குஇவ்வடி மேற்கோள்; தொல் எச்ச. சூ. 6, ந. ; இ. வி. சூ. 175, உரை.

19. அரக்கன் - இராவணன். ஞான்றை - சமயம் ; ஐ : சாரியை.

20. மதரணி - கதிர்த்த ஆபரணங்கள்.

20 - 21.குரங்கின் செம்முகப் பெருங்கிளை - செவ்விய முகத்தையுடையபெரிய குரங்கின் குழு ; சுக்கிரீவனைச் சேர்ந்த குரங்குகள் ; "செம்முகமந்தி" (நற்.151 : 8) ; "துய்த்தலைச், செம்முகமந்தியாடும்" (அகநா.241 : 14 - 5) . இழை - ஆபரணம் ;இழைக்கப்படுதலான் வந்த பெயர். 22. அறாஅ - நீங்காத.பெற்றிகும் - பெற்றோம்.

24. அரும்படரெவ்வம் - நினைவாலுண்டாகும் நோயின்வருத்தம் ; புறநா. 145 : 10.

மு.பாடாண்டிணைத் துறைகளுள், ‘பெற்ற பின்னரும்பெருவளனேத்தி, நடைவயிற் றோன்றிய விருவகை விடை’ (தொல்.புறத்திணை. சூ. 30, இளம்.; சூ. 36, ந.) என்பதற்கு இது மேற்கோள்.

(378)

379

யானேபெறுகவன் றாணிழல் வாழ்க்கை
அவனே பெறுகவென் னாவிசைநுவறல்
நெல்லரி தொழுவர் கூர்வாண் மழுங்கிற்
பின்னைமறத்தோ டரியக் கல்செத்
5தள்ளல்யாமைக் கூன்புறத் துரிஞ்சும்
நெல்லமல் புரவினிலங்கை கிழவோன்
வில்லி யாதன் கிணையேம் பெரும
குறுந்தாளேற்றைக் கொழுங்க ணவ்விளர்
நறுநெய் யுருக்கி நாட்சோறீயா
10வல்லனெந்தை பசிதீர்த் தல்லெனக்
கொன்வரல்வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
கேட்டதற் கொண்டும்வேட்கை தண்டாது
விண்டோய் தலைய குன்றம்பின்பட
..................... ரவந்தனென் யானே தாயில்
15தூவாக்குழவி போல வாங்கத்
திருவுடைத் திருமனை யைதுதோன்றுகமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்படுகுண்டகழ் நீண்மதி லூரே.