பக்கம் எண் :

567

9. தீஞ்சுளைப் பலவு : தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே', 'தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்' (புறநா. 109 : 5, 129 : 4) ; 'மன்றப் பலவின் றீஞ்சுனை' (ஐந். எழு. 4) . நாஞ்சில் - ஒருமலை ; 'நாஞ்சிற் பொருநன்' (புறநா. 137, 139, 140)

5 - 9. நாஞ்சில் வள்ளுவன் மறச்சாதியினனென்றும் பாண்டியர் களுக்குரிய படைவீரனென்றும் தெரிகிறது.
10. துப்பெதிர்ந்தோர்க்கு - வலியோடு எதிர்த்த பகைவர்க்கு ; 'வெப்புடைய வரண்கடந்து, துப்புறுவர் புறம்பெற்றிசினே', 'கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த, நெடுமொழி மன்னர்' (புறநா. 11 : 8 - 9, 54 : 8 - 9) . உள்ளாச் சேய்மையன் - நினைத்தற்கும் எட்டாத மிக்க தூரத்துள்ளான்.

11. நட்பு எதிர்ந்தோர்க்கு - அன்பால் அடைந்தவர்க்கு.

10 - 11. 'துப்புப் பகையுமாதல்', 'துப்பெதிர்ந்தோர்க்கே........நண்மையன்’ என்பதனானும் அறிக'; (குறள், 1165, பரிமேல்.)

12. கந்தனென்பது, நாஞ்சின்மலைத்தலைவர் பரம்பரையில் உள்ளானும் இப்பாட்டுடைத் தலைவனுமாகிய ஒருவன் பெயர்.

14. ஆகன்மாறு - ஆதலால் ; 'அனையை யாகன் மாறே' (புறநா. 4, 17, 20 : 20, பதிற.் 80 : 12) .

15. வற்கடக் காலம் வரினும்.

16. போயின்று - நீங்கப்பெற்றது. பூத்த - பலவாற்றாலும் பொலிவு பெற்ற.

15 - 6. புறநா. 378 : 12, குறிப்புரை.

(380)

381

ஊனு மூணு முனையி னினிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத் தாற்றி யிருந்தனெ மாகச்
5சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென
யாந்தன் னறியுந மாகத் தான்பெரி
தன்புடை மையி னெம்பிரி வஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப்
பயம்பகர் வறியா மயங்கரின் முதுபாழ்ப்
10பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண்
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி
விரல்விசை தவிர்க்கு மரலையில் பாணியின்