| 15 | இலம்பாடகற்றல் யாவது புலம்பொடு தெருமர லுயக்கமுந்தீர்க்குவோ மதனால் இருநிலங் கூலம் பாறக் கோடை வருமழைமுழக்கிசைக் கோடிய பின்றைச் சேயை யாயினுமிவணை யாயினும் | | 20 | இதற்கொண்டறிநை வாழியோ கிணைவ சிறுநனி, ஒருவழிப்படர்கென் றோனே யெந்தை ஒலிவெள் ளருவி வேங்கடநாடன் உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும் அறத்துறையம்பியின் மான மறப்பின் | | 25 | றிருங்கோ ளீராப்பூட்கைக் கரும்ப னூரன் காதன் மகனே. |
(பி - ம்.) 1‘முணைஇயவினிதென’ 2 ‘பாஅறபெய்தவும்’ 8 ‘துணரியதுளவாகி’ 9 ‘பயம்பகர்பறியா’, ‘முதுபாட்’ 10 ‘தாங்கினி தீயா’ 11 ‘புறங்கடைக்கொன்றி’ 12 ‘சிதாஅரளமபிற............தடாரிடை’ 13 ‘ஊனுகிர்வலந்த தென்கண்’ 20 ‘டறிகை’ 24 ‘பிறப்பினறிருககொளளாப’ திணையும் துறையும் அவை. கரும்பனூர்கிழானை நன்னாகனார். (கு - ரை.) 1. ஊன் - இறைச்சி ; ஊண் - அடிசில். முனையின் - வெறுத்தால். 2. பாகு - வெல்லப்பாகு ; "காரகற் கூவியன் பாகொடு பிடித்த, விழைசூழ் வட்டம்" (பெரும்பாண். 377 - 8) 3. அளவுபு கலந்து - நன்றாகக்கலந்து. 1 - 3. "சுவைய, வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ" (பொருந. 107 - 8) 4. விருந்து - புதுமை. ஆற்றி - பசியைத் தணித்துக்கொண்டு. 5. சென்மோ - வருவாயாக. 1 - 5. "ஊனு மூணு முனையினென்னும் புறப்பாட்டினுள் ‘சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென’ என்பதனையும் தன்மைக் கண் ‘மோ’ வருமென இவ்வாறு அமைத்தலுமொன்று ; அன்றிப் பெரும! எம்விழவுடை நாட்டே நீ செல்லென்று சுற்றத்தார் தலைவனை நோக்கிக்கூற அப்பொருநனும் பாட்டுடைத்தலைவனை நோக்கிப் பின்னும் கூறினானாகப் பொருள் கூறுதலுமொன்று" (தொல். இடை. சூ. 27, ந.) 6. அறியுநமாக - அறிவேமாக. 6 - 7 " நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி, துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி" (மலைபடு. 559 - 60)
|