8. துணரியது - குலைகொண்டது ; "பைம்பாகற் பழந்துணரிய, செஞ்சுளைய கனி" (பொருந. 191 - 2) . ஊழ்த்து -செவ்வியழிந்து. 9. பகர்வு - கொடுத்தல். அரில் - சிறுதூறுகள். முதுபாழில். 12. சிதாஅர் வள்பு - துண்டித்த வார் ; "சிதாஅர் வள்பினென்றெடாரி" (புறநா. 376 : 4) 14. அரலை - குற்றம். பாணியின் - பாட்டால். 17. கூலம் - பலபண்டம். 19. இவணை - இவ்விடத்துள்ளாய். 23. உறுவர் - பெரியோர். 24. அறத்துறையம்பி - தருமவோடம் ; "பிறவி யென்னும் பெருங்கடல் விடூஉம், அறவிநாவாய்" (மணி. 11 : 24 - 5) மகன் (26) படர்கென்றோனே (21) மு. தொல். புறத்திணை. சூ. 30, இளம். ; சூ. 30, ந. மேற். (381) 382 | கடற்படை யடற்கொண்டி மண்டுற்ற மலிர்நோன்றாட் டண்சோழ நாட்டுப் பொருநன் அலங்குளை யணியிவுளி
| | 5 | நலங்கிள்ளி நசைப்பொருநரேம் பிறர்ப்பாடிப் பெறல்வேண்டேம் அவற்பாடுது மவன்றாள் வாழியவென நெய்குய்ய வூனவின்ற பலசோற்றா னின்சுவைய | | 10 | நல்குரவின் பசித்துன்பினின் முன்னாள் விட்ட மூதறி சிறாஅரும் யானும், ஏழ்மணியங் கேழணியுத்திக் கட்கேள்விக் கவைநாவின் நிறனுற்ற வராஅப்போலும் | | 15 | வறனொரீஇ வழங்குவாய்ப்ப விடுமதி யத்தை கடுமான் றோன்றல் நினதே, முந்நீ ருடுத்தவிவ் வியனுல கறிய எனதே, கிடைக்கா ழன்ன தெண்கண் மாக்கிணை கண்ணகத் தியாத்த நுண்ணரிச் சிறுகோல் | | 20 | எறிதொறு நுடங்கி யாங்குநின் பகைஞர் கேட்டொறு நடுங்க வேத்துவென் வென்ற தேர்பிறர் வேத்தவை யானே. |
|