5 | தன்புக ழேத்தினெ னாக வூன்புலந் தருங்கடி வியனகர்க் குறுகல் வேண்டிக் கூம்புவிடு மென்பிணி யவிழ்த்த வாம்பற் றேம்பா யுள்ள தங்கமழ் மடருளப் பாம்புரி யன்ன வடிவின காம்பின் | 10 | கழைபடு சொலியி னிழையணி வாரா ஒண்பூங் கலிங்க முடீஇ நுண்பூண் வசிந்துவாங்கு நுசுப்பி னவ்வாங் குந்திக் கற்புடை மடந்தை தற்புறம் புல்ல எற்பெயர்ந்த நோக்கி......................... | 15 | ........................கற்கொண் டழித்துப் பிறந்தன னாகி யவ்வழிப் பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பறி யேனே குறுமுலைக் கலமரும் பாலார் வெண்மறி நரைமுக வூகமொ டுகளுஞ்சென.................... | 20 | ......................... கன்றுபல கெழீஇய கான்கெழு நாடன் கடுந்தே ரவியனென ஒருவனை யுடையேன் மன்னே யானே அறானெவன் பரிகோ வெள்ளியது நிலையே. |
(பி - ம்.) 5 ‘தான் புகழ்ந்து’ 6 ‘குறுங்கல்வேண்டி’ 9 ‘பாம்பு பயன நதனனவடிவினசாமபின’ 16 ‘டளித்துப்’ 17 ‘படர்பறிவோனே’ 20 ‘தன்று பலகெழீஇய காழகெழு’ 23 பரிசொவெள்ளி’ திணையும் துறையும் அவை. .....மாறோக்கத்து நப்பசலையார் (பி - ம். நபபாலையார்) (கு - ரை.) 1. சேவல் - ஆண்கோழி. எடுப்ப - எழுப்ப. ஏற்றெழுந்து - துயிலுணர்ந்தெழுந்து ; 'தூமலர்க்க ணேற்க துயில்' (பு.வெ.197) ; 'துயிலிடைக் கண்ட துணைநலத் தேவியை, இயல்புடையங்க ணேற்றபிற் காணாது' (பெருங். 4.7 : 91 - 2) 2. மு. புறநா. 374 : 4. உறைக்கும் - துளிக்கும். 3. நுண்கோற் சிறுகிணை : புறநா. 382 : 18 - 9. சிலம்ப ஒற்றி - முழங்க அடித்து. 4. பகடு - உழும் எருது; எருமைக்கடாவுமாம். 1 - 4. புறநா. 385 : 1 - 2. 6. குறுகல் - அடைதல். குறுகல்வேண்டி (6) ஏத்தினெனாக (5)
|