பக்கம் எண் :

576

1 - 3. சுட்ட நெய்யில் வேகும் வறையின்முழக்கத்திற்குக் கயத்தில் வீழும் மாரித்துளியின்முழக்கம் உவமம் ; சீவக. 2971

4. சூடு -சுடப்பட்ட இறைச்சி.

5. புறநா. 384: 8 - 9. 6.ஆன்பயம் - பசுப்பால்.

7. உண்டமையாலுண்டானவேர்வையல்லாமல்.

8. அறியாதபடி.

10 - 11. கரும்பின்பாத்தி : “கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல்” (ஐங்குறு. 65)

11. ததும்பின -நிறைந்தன.

12. புறவு - முல்லைநிலம்.ஆயத்தான் - ஆயத்தோடு கூடி.

13. குறும்பு -சிற்றரண்கள்.

14. கால் தந்த -காற்றாற்கொண்டுவரப்பட்ட.

15. சினை - கிளை.நிலைக்குந்து - நிலைக்கும்.

17. உமண் - உப்புவிற்குஞ்சாதி.

16 - 7. “சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப், பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி” (பெரும்பாண். 64 - 5)

19.பொராப் பொருநர் - கூத்தர் ; வெளிப்படை ; பொராஅ -ஒப் பில்லாதவெனினுமாம். 20. செலினும் - சுக்கிரன்சென்றாலும்.

24. வெள்ளி - சுக்கிரன். 25வேண்டியது - யாம்வேண்டியதை.

(386)

387

வள்ளுகிர வயலாமை
வெள்ளகடு கண்டன்ன
வீங்குவிசிப் புதுப்போர்வைத்
தெண்கண் மாக்கிணை யியக்கி யென்றும்
5மாறுகொண்டோர் மதிலிடறி
நீறாடிய நறுங்கவுள
பூம்பொறிப் பணையெருத்தின
வேறுவேறு பரந்தியங்கி
வேந்துடைமிளை யயல்பரக்கும்
10ஏந்துகோட் டிரும்பிணர்த்தடக்கைத்
திருந்துதொழிற் பலபகடு
பகைப்புல மன்னர் பணிதிறை தந்துநின்
நகைப்புல வாணர் நல்குர வகற்றி
மிகப்பொலியர்தன் சேவடியத்தையென்
15றியானிசைப்பினனிநன்றெனாப்