பக்கம் எண் :

577

பலபிற வாழ்த்த விருந்தோரென்கோ.......
மருவவினக ரகன்
திருந்துகழற்சேவடி குறுகல் வேண்டி
வென்றிரங்கும் விறன்முரசினோன்
20என்சிறுமையி னிழித்துநோக்கான்
தன்பெருமையின் றகவுநோக்கிக்
குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்றுநிறையு நிரையென்கோ
25மனைக்களமரொடு களமென்கோ
ஆங்கவை, கனவென மருள வல்லே நனவின்
நல்கி யோனே நசைசா றோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாட்
30செல்வக் கடுங்கோ வாழி யாதன்
ஒன்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவன்
விடுவர் மாதோ நெடிதே நி.........
புல்லிலை வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினு மாங்கட்
35பல்லூர் சுற்றிய கழனி
எல்லாம் விளையு நெல்லினும் பலவே.

(பி - ம்.) 2 ‘வௌககொணடனன’ 4 ‘தென்கண்’ 8 ‘பாநதியயங்கி’ 9 ‘வேந்துடையிளை’ 13 - 6 நகைபபல வாழ்நர் - மிபபொலி யாத செவடி பொலியாததையென்றனியானிசப பினனினனனிநனறனிற பலபிறன்’ 16 ‘ரெலகோ’ 17 ‘மிருவ’ 19 - 20 ‘வெனறிரககு முரசி னானெனச சிலமபினிழித்து’ 20 ‘எனசசிறுமை’ 22 ‘குனறகழகளிறு’ 25 ‘மகனைககளமரொடு கலமென’ 27 ‘நலகியோனெநதை நகைசான றோன்றல்’ 31 ‘என்னாத்தெவ்வர்’,‘பணிததிவணிவிடுவா’ 34 ‘மணலினுமாக்கட்’

திணையும் துறையும் அவை.

சேரமான்சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதனைக் குண்டுகட்பாலியாதன்.

(கு - ரை.) 1. வள் - கூர்மை ; “வள்ளணி வளைநாஞ்சிலவை” (பரி. 15 : 57)

2. அகடு -வயிறு.

1 - 4. கிணைப்பறை ஆமையின் அகடுபோல்வது ; “ஆமை, கம்புளியவ னாக விசிபிணித், தெண்கட் கிணையிற் பிறழும்” (அகநா. 356 : 2 - 4) ; பு. வெ. 186, 306.