7. எருத்து - பிடரி. 9. மிளை - காவற்காடு. 11. பகடு - யானை. 13.நகைப்புலவாணர் - புலவர். 12 - 3.பகைவர் அளித்த திறையைத் தம்மைச்சார்ந்தஇரவலர்க்குக் கொடுத்தல் அரசர்க்கியல்பு. 14.தன் சேவடி மிகப்பொலிக. 16. என்கோ - என்பேனோ. 17. மருவுதற்குஇனிய நகரம். 19. வென்று -போர்க்களத்தில் வஞ்சியாது பகைவர்க்கு முன்னே நின்று ; புறநா. 112 : 4, குறிப்புரை. 20. என்னை இழித்து நோக்கானாகி. 21. தன்னுடைய மேம்பாட்டை அறிந்து. 23. மா - குதிரை. 22 - 3. ஓகாரம் எண்ணுப்பொருளில் வந்ததற்கும், அதன்பின்வல்லினம் இயல்பாயதற்கும் இவ்வடிகள் மேற்கோள் ; தொல்.உயிர் மயங்கு. சூ. 88, இளம்.; ந. 24. நிரை -பசுக்கூட்டம். 26. “கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப” (பொருந. 98) ; புறநா. 140 : 5 - 8, குறிப்புரை. 26 - 7. “கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப, நனவி னல்கியோ னசைசா றோன்றல்” (புறநா. 377 : 19 - 20) 30. இப்பாட்டுடைத்தலைவன் பெயர் இவ்வடியில் அமைந்துள்ளது. 31. பணித்து - தாழ்த்தி. 33. வஞ்சியென்னும் மரவிசேடத்திற்கு உரிய ‘புல்லிலை’ என்னும் அடை அதன் பெயரையுடையதாகிய நகருக்கும் ஆயிற்று. 34. பொருநை - ஓராறு. “தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன், நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார், போர் முற்றொன் றறியாத புரிசை” (கலித். 67 : 3 - 5) 33 - 4. “ஒளிதிக ழுத்தி யுருகெழு நாகம்” (பரி. 12 : 4, பரிமேல்.) என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; கலித். 67 : 3 - 4. 34 - 6. “மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள், தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28 : 125 - 6) (387) 388 | வெள்ளி தென்புலத் துறைய விளைவயற் பள்ளம் வாடிய பயனில் காலை இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர் ................ பொருந்தித் |
|