பக்கம் எண் :

580

10. பண்ணன் : இப்பாட்டுடைத்தலைவன்.

11. வினைப்பகடு - உழவுத்தொழிற்குரிய எருது ; கடா. ஏற்றம் - நீர் இறைத்தற்குரியது ; இப்பெயர் ஏத்தமெனவும் வழங்கும்.

13. மணி - ஆராய்ச்சிமணி ; “வாயிற் கடைமணி நடுநா நடுங்க, ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன், அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்” (சிலப். 20 : 53 - 5) . மருகன் - வழித்தோன்றல்.

14. பிணித்தல் - கட்டுதல்.

16. கண்மாறிலியர் - கண்ணோட்டம் ஒழிவானாக. புரவு - காத்தல.்

(388)

389

நீர்நுங்கின் தண்வலிப்பக்
கானவேம்பின் காய்திரங்கக்
கயங்களியுங் கோடையாயினும்
ஏலா வெண்பொன் போருறு காலை
5எம்மு முள்ளுமோ பிள்ளையம் பொருநன்
என்றீத் தனனே யிசைசா னெடுந்தகை
இன்றுசென் றெய்தும் வழியனு மல்லன்
செலினே காணா வழியனு மல்லன்
புன்றலை மடப்பிடி யினையக் கன்றுதந்து
10குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
கல்லிழி யருவி வேங்கடங் கிழவோன்
செல்வுழி யெழாஅ நல்லேர் முதியன்
ஆத னுங்கன் போல நீயும்
பசித்த வொக்கற் பழங்கண் வீட
15வீறுசா னன்கல நல்குமதி பெரும
ஐதக லல்குன் மகளிர்
நெய்தல்கே ளன்மார் நெடுங்கடை யானே.

(பி - ம்.) 1 ‘கவைநிறபக’ 4 ‘போகுறு.......பொருநவென்று’ 5 ‘பொருநவென்று’ 13 ‘ஆறுநுஙகன்’, ‘ஆகுநுங்கன’ 14 ‘பசிதது வொஙககறபழங’ 15 ‘பெருமவைததல’

திணையும் துறையும் அவை.

ஆதனுங்கனைக் கள்ளிலாத்திரையனார்.

(கு - ரை.) 1. நீர்நுங்கு - நீரையுடைய பனநுங்கு. வலிப்ப - நீரின்றி வற்ற.

2. திரங்க - உலர ; “திரங்குமர னாரிற் பொலியச் சூடி” (மலைபடு. 431)