3. கயம் - ஆழமான நீர்நிலை. களியும் - நீர்வற்றிக்களிமயமாதற்குரிய. 4. வெண்பொன் - வெள்ளிக்கோள். போர் - மற்றைக் கோள்களோடு அது செய்யும் யுத்தம். இது கிரகயுத்தமென்று சொல்லப்படும் ; “ஆதி சான்ற மேதகு வேட்கையின், நாளுங் கோளு மயங்கிய ஞாட்பின், மதியமு ஞாயிறும் பொருவன போல” (பாரதம்; தொல். புறத். சூ. 17, மேற்.) ; “தோளோடு தோடேய்த் தலிற்றொன்னிலந் தாங்கலாற்றாத், தாளோடு தாடேய்த்தலிற் றந்த தழற்பி றங்கல், வாளோடு மின்னோடுவபோனெடு வானினோடும், கோளோடு கோளுற் றனவொத் தடர்ந் தார்கொதித்தார்” (கம்ப. வாலிவதை. 38) என்பது இங்கே அறியற்பாலது. 5. எம்மும் உள்ளுமோ - எம்மையும் நினைப்பானோ. 7. காட்சிக்கு எளியனுமல்லன். 8. காணுதற்கு அரியனுமல்லன். 9. புன்றலை - சிவந்த தலை ; “புன்றலை மகாரோடு” (மலைபடு. 253, ந.) இனைய - வருந்த. 9 - 11. “கறையடி மடப்பிடி கானத் தலறக், களிற்றுக்கன்றொழித்த வுவகையர் கலிசிறந்து, கருங்கான் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து, பெரும்பொளி வெண்ணா ரழுந்துபடப் பூட்டி, நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர், நறவுகொடை நல்லிற் புதவுமுதற் பிணிக்கும், கல்லா விளையர் பெருமகன் புல்லி, வியன்றலை நன்னாட்டு வேங்கடம்” (அகநா. 83 : 3 - 10) 12. பகைவர் புறங்கொடுத்துச் செல்லும்போது பின் செல்லாத ; மதுரைக். 177, ந. ; பதிற். 90 : 27, உரை. 13. ஆதனுங்கன் : இப்பாட்டுடைத் தலைவன். 14. ஒக்கல் - சுற்றம். பழங்கண் - துன்பம். 17. நெய்தல் - நெய்தற்பறை ; சாப்பறை. (389) 390 | அறவை நெஞ்சத் தாயர் வளரும் மறவை நெஞ்சத் தாயி வாளர் அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ் ............................மன்னமுற்றத் | | 5 | தார்வலர் குறுகி னல்லது காவலர் கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர் மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்பவென் அரிக்குரற் றடாரி யிரிய வொற்றிப் பாடி நின்ற பன்னா ளன்றியும் | | 10 | சென்றஞான்றைச் சென்றுபட ரிரவின் |
|