பக்கம் எண் :

582

வந்ததற்கொண்டு நெடுங்கடை நின்ற
புன்றலைப் பொருநனளியன் றானெனத்
தன்னுழைக் குறுகல் வேண்டியென்னரை
முதுநீர்ப் பாசி யன்ன வுடைகளைந்து
15திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ
மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும்
அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில்
வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி
முன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை
20இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
கொண்டி பெறுகென் றோனே யுண்டுறை
மலையல ரணியுந் தலைநீர் நாடன்
25கண்டாற் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி
........................................................
வானறி யலவென் பாடுபசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ வறியல் காண்பறி யலரே.

(பி - ம்.) 2 ‘தாயிவிளா’ 3 ‘செநதிநெடுநகாமலாகமழு’ 6 ‘தாவலர்’ 7 ‘மழைககளத’ 8 ‘பனனாளறையும்’ 14 ‘வுடைகளைநததிரும வானனன’ 17 ‘அமிரதானமரபின’ 20 ‘பொருமபுகறறத்தடுஙகண் வேங்கை’ 21 ‘தகடுகனை வேங்கை’ 22 ‘படுதருசெநநெற்’ 25 ‘கணடாராககொணடுமவனறிருநதடி’

திணையும் துறையும் அவை.

அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார்.

(கு - ரை.) 1. அறவைநெஞ்சம் - அறத்தையுடைய நெஞ்சம் ; “அறவை யாய ரகன்றெரு வடைந்தன” (சிலப். 22 : 116) ; ‘அறவை நெஞ்சத்தாயர்’ என்பதை, “ஆகாத் தோம்பி யாப்பய னளிக்கும், கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை” (சிலப்.15 : 120 - 21) என்பது விளக்குகின்றது.

1 - 2. புறநா. 44 : 11 - 3. செருந்தி - ஒரு பூமரம்.

5. ஆர்வலர் - பரிசிலர். காவலர் - அரசர். 6. கடி - காவல்.

5 - 6. “புலிதுஞ்சு வியன்புலத் தற்றே, வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே” (புறநா. 54 : 13 - 4)