7. சிலம்ப - முழங்க ; முழக்கம் : இங்கே எதிரொலி. 10. சென்றஞான்று - முதல்நாள். 12. அளியன் - அளிக்கத்தக்கான். 14. “ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி, வேர்புரை சிதாஅர் நீக்கி” (புறநா. 392 : 13 - 4) ; “பாசி வேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதாஅர் நீக்கி” (பொருந. 153 - 4) ; “பாசி யன்ன சிதர்வை நீக்கி” (பெரும்பாண். 468) 15. மலரென்றது பகன்றைப்பூவை ; புறநா. 393 : 17 - 8, குறிப்புரை. 17. துவை - துவையல். 18. வெள்ளிக்கலம் : பெரும்பாண்.477 - 80, ந. 19. முன்னூர் - ஊர்முன். பொதியில் - அம்பலம். 20. “இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்” (புறநா. 394 ; 16) 21. அகடுநனை - உள்ளிடம் நனைந்த. வேங்கைவீ - வேங்கை மரத்துப்பூ. 22. பகடுதரு செந்நெல் - எருது முதலியவைகள் உழுதுண்டாக்கிய செவ்விய நெல் ; “பகடுதருபெருவளம் வாழ்த்தி” (புறநா. 391 ; 4) ; “பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க” (நாலடி. 2) 21 - 2. மலைபடு. 434 - 5. 23. கொண்டி - பொருளின் மிகுதி ; புறநா. 382 : 1. 27. வான் - மேகம். (390) 391 | தண்டுளி பல பொழிந் தெழிலி யிசைக்கும் விண்டு வனைய விண்டோய் பிறங்கல் முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப் பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற | | 5 | திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி அரிய லார்கைய ருண்டினி துவக்கும் வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென ஈங்குவந் திறுத்தவென் னிரும்பே ரொக்கல் தீர்கை விடுக்கும் பண்பில முதுகுடி | | 10 | நன.........வினவலின் முன்னும் வந்தோன் மருங்கில னின்னும் அளிய னாகலிற் பொருந னிவனென நின்னுணர்ந் தறியுந ரென்னுணர்ந்து கூறக் காண்கு வந்திசிற் பெரும................... | | 15 | .......................பெருங்கழி நுழைமீ னருந்தும் |
|