பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 78
78

பிள்ளை லோகாரிய சீயர் (500 ஆண்டுகட்கு முன்)

  நெஞ்சுக் கிறாள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம். தமிழ நன்னூற்றுறைகள்
அஞ்சுக் கிலக்கியம் ஆரண சாரம் பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறிபர காலன் பனுவல்களே

என்ற பெரிய திருமொழிச் சிறப்புப் பாயிரத்தில், தமிழ நன்னூற்றுறை களஞ்சுக்கு என்பதன் பொருளை விளக்குமிடத்து, திரவிட சாஸ்திரம், எழுத்து சொல் பொருள் யாப்பு அலங்காரம் என்கிற விலக்கணமான பஞ்ச லக்ஷணத் தோடே கூடியவாறே நிற்பது என வரைந்திருக்கின்றார்.

18ஆம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்திருந்த தாயுமான அடிகள் பாடிய கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் செய்யுளில்,

  . . . . வடமொழியிலே
வல்லான் ஒருத்தன்வர வுந்திரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன்
வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியில்
வசனங்கள் சிறிது புகல்வேன்

என்னும் பகுதியில், திரவிடம் தமிழ் என்னும் இரு சொல்லும் ஒரு மொழியையே குறிக்கின்றன. ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் தெய்வப் பனுவல், தமிழ் வேதம், திரவிடவேதம், திரவிடப் பிரபந்தம் என்னும் பெயர்களால் வழங்குகின்றன.

பாகவத புராணத்தில், சத்திய விரதன் என்னும் பெயராற் குறிக்கப்படும் ஒரு தமிழரசன் திரவிடபதி எனப்படுகின்றான். திரவிடம் என்னும் சொல்லுக்கு, தமிழ்நாடு என்னும் பொருளும் அகராதிகளிற் குறிக்கப்பட்டுள்ளது.

ஆரியர் இந்தியாவிற் குடிபுகுந்து வட இந்தியா முழுதும் பரவிய பின் குமரிலபட்டர் காலம் (7ஆம் நூற்றாண்டு)வரை தென்னாடும், தென்னாட்டு மக்களினங்களும் அவை பேசிய மொழிகளும், தமிழின் தலைமைபற்றி, திரவிடம் என்றே அழைக்கப்பட்டு வந்தன.

மனு, தம் (ஆரிய) அற நூலில் (10 : 43,44) ஆரியரல்லாத பல்வேறு இனத்தாரைக் குறிக்குமிடத்து தமிழரையும் தெலுங்கர் முதலிய திராவிடரையும் வேறுபடுத்தாது அவரெல்லாரையும் ஒருங்கே தழுவுமாறு - திராவிடர் என்னும் சொல்லையே ஆண்டிருக்கின்றார். விந்திய மலைக்குத் தெற்கில் வந்து குடியேறிய பிராமணரும், திராவிடப் பிராமணர் எனப்பட்டனர். இது நாடு பற்றியதேயன்றி இனம்பற்றியதன்று. மலேயாத் தமிழர், தென்னாப்பிரிக்கத் தமிழர் என்னும் வழக்கை நோக்குக. இம்முறை பற்றியே, தேவார மூவருள் ஒருவரான திருஞானசம் பந்தரும் திராவிட சிசு எனப்பட்டார். வட நாட்டு மொழிநூலறிஞர், முதற்கண், (ஆரிய) வேத காலத்து இந்திய வட்டார மொழிகளைச் சமற்கிருதத்திற்கு முந்தி யுண்மைபற்றிப் பிராகிருதம் என