|
திண்ணம். ஆயினும், ஆனைக்கும் அடி சறுக்கும் என்னும் பழமொழிக் கேற்ப, கால்டுவெல் திரவிடம்
என்னும் சொல்லே முறையே, (த்ரவிடம் - த்ரமிடம் - த்ரமிள - தமிழ்) எனத் திரிந்ததென்று
தலைகீழாகக் கொண்டார். ஆயின், கிரையர்சன் அதைத் திருத்தி உண்மையைக் கூறியது மகிழ்ச்சிக்குரியது.
எனினும், இன்றும் சிலர் மயங்குவதற்குக் காரணம் வரலாற்றறிவின்மையே. ஆரியர் இந்தியாவிற்
கால் வைத்து கி. மு. 3000 ஆண்டெல்லையென்றும், தமிழ் முழு வளர்ச்சியடைந்து முத்தமிழாய் வழங்கிய
தலைக்கழகக் காலம் கி.மு. 10,000 ஆண்டெல்லை யென்றும், அறியின், ஒருவரும் ஐயுறார் என்பது
தேற்றம். வடமொழியில் நூற்றுக்கணக்கான தென்சொற்களிருந்தும் அவற்றை யெல்லாம் வடசொல்லெனக்
காட்டுவதையே வடமொழியகராதிகளெல்லாம் கோட் பாடாகக் கொண்டிருக்கின்றன. வடமொழி தேவமொழியெனும்
மயக்கு புலவருள்ளத்திலு மிருந்ததினால் கம்பர் அதைத் "தேவபாடை" என்றார். தொல்காப்பியச்
சொல்லதிகாரவுரையில் (401) தமிழ்ச் சொல் வட பாடைக்கட் செல்லாமையானும், வடசொல் எல்லாத்
தேயத்திற்கும் பொதுவாதலானும் எனவுரைத்தார் சேனாவரையர். இத்தகைய நிலைகள், வடவர் திரவிடம்
என்னும் சொற்குப் பொருந்தப் பொய்த்தலாகச் சில பொருட் காரணம் காட்டத் தூண்டின. த்ரு என்னும்
வடமொழி வேர் துரத்துதற் பொருள் தருவதென்றும், ஆரியரால் தெற்கே துரத்தப்பட்டவர் திரவிடர்
எனப்பட்டனர் என்றும் கூறுவர் ஒரு சாரார். திரவிடம் என்பது தெற்கு என்று பொருள்படுவதென்றும்,
தென்கோடி மாகாணத்தார் திரவிடர் எனப்பட்டனர் என்றும் கூறுவர் மற்றொரு சாரார். திரவிடம்
தெற்கேயிருப்பதினாலேயே, திரவிடம் என்னும் சொற்குத் தெற்கென்னும் வழிப்பொருள் தோன்றிற்று.
சிவஞான முனிவர் உள்ளதைக் கொண்டு நல்லதைப் பண்ணும் முறையில், துரத்துதல் அல்லது ஓட்டுதல்
என்னும் வேர்ப்பொருளை ஒப்புக் கொண்டு, தீவினை யகற்றும் அற நூல்கள் தமிழிற் சிறந்திருப்பது
பற்றி, தம் காஞ்சிப் புராணத்தில்,
| |
எவ்வினையும்
ஓப்புதலால்
திராவிடம் என்றியல் பாடை
|
|
என்று பாடினார்.
த்ரு என்னும் வடமொழி வேர் ''துர'' என்னும் தமிழ் வேரின்
திரிபே. இத் தமிழ்வேர் மேலையாரியத்தில் தியூத்தானியம் என்னும் கிளையிலும் சென்று வழங்குகின்றது.
செருமன் : treiben
-
பண்டை ஆங்கிலம் drifen
.
ஆங்கிலம் : drive,
துரத்தல் என்பது ஓட்டுதல்.
ஆகவே, வடமொழியார் கூறும் இரு பொருளும், திரவிடம் என்னும்
சொல்லை வடசொல்லாகக் காட்ட இயலாமை காண்க.
|