நபிகள் நாயகத்தின்
ஒளிமிகு வரலாற்றின்
இனிய, எளிய
உயிர்த் தமிழில்
ஆக்கிப் படைத்ததன்
மூலம் பாக்கவி
அவர்கள் இஸ்லாமிய
நெறிக்கும் தமிழ்
மொழிக்கும்
பெருந்தொண்டு
செய்துள்ளார்.
இந்நூல் தமிழ்
இலக்கியத்திற்குச்
சிறந்த சேர்க்கையாகும்.
இந்நூல் தமிழறிந்தோர்
அனைவர் இல்லங்களிலும்
ஒளிவிடுவதாக!
தொண்டுக்கே
வாழ்வு ... என்பது
நாயகத்தின்
நற்கொள்கை.
அதைக் கடைப்பிடித்து
நற்தொண்டு, பெருந்தொண்டு,
காலத்துக்கேற்ற
தொண்டு புரிந்துள்ளார்
பாக்கவி. தமிழ்
மக்கள் அவருக்குப்
பெரிதும் கடமைப்பட்டுள்ளனர்.
சிறந்த இந்நூல்
ஒவ்வொரு தமிழரும்
படிக்க வேண்டும்.
ஒருமுறையல்ல,
பன்முறை படிக்கவேண்டும்.
ஏன்? இது உயிர்
இறைக்குடும்பம்
முழுமைக்கும்
- அன்புக்கோர்
பாலமாகி துணைபுரியும்.
|