பக்கம் எண் :

2

nazeer
நெஞ்சில் நிறைந்த நபிமணி
சான்றுரைகள் தந்த மார்க்க அறிஞர்கள்

மதீனா முனவ்வரா
அல்ஜாமிஅத்துல் இஸ்லாமிய்யாவின் ஜெனரல் செக்ரடெரி
அல்லாமா முஹம்மது இப்னு நாஸிர் அல் அபூதி
அவர்கள்

நபிபெருமானார் (ஸல்) அவர்கள்மீது திருப்புகழ் பாடிய - மாதிஹுர் ரசூலாகிய - முஹம்மது ஸதக்கத்துல்லாஹ் ஸிராஜ் அவர்கள் நெஞ்சில் நிறைந்த நபிமணி என்ற நூலை ஜாமிஆ இஸ்லாமிய்யா என்ற இஸ்லாமியப் பல்கலைக் கழக நூல் நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.

இவ்வளவு பெரிய அளவில் இந்நூல் அவர் எழுதியதையும், அத்தோடு அழகிய முறையில் அச்சேற்றி வெளிக் கொணர்ந்ததையும் கண்டு பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றோம். இப்பணியை ஆற்றியதற்காக வல்ல இறைவன் இவருக்கு அளவற்ற அருட்பயனை அளிக்கவும், பேராற்றலை வழங்கவும் அவனிடம் பிரார்த்திக்கின்றோம்; அவனே நம் வேண்டுகோளை நிறைவேற்றுபவனாகவும் உள்ளான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அண்டையில் - ஜாமிஆ இஸ்லாமிய்யா என்ற இப்பல்கலைக்கழகத்தில் - சிறப்புமிக்க இந்நூலாசிரியரை நாங்கள் காணும் வாய்ப்பைப் பெற்றதற்காகவும் மேலும் திருமதீனாவில் உள்ள புனிதமான ரவ்லா ஷரீபக் கண்டுகளித்து தாம் இயற்றிய நூலைச் சமர்ப்பணம் செய்வது இந்நூலாசிரியரின் நீங்காத நினைவாக இருந்து வந்ததைக் கருணைக் கடலாகிய இறைவன் நிறைவேற்றித் தந்ததற்காகவும் நாங்கள் உண்மையிலேயே உவகை கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே !

திருமதீனா
1-5-1965

முஹம்மது இப்னு நாஸிர், அல்அபூதி