எனது அன்பர்
மௌலானா மௌலவி
G. M. ஸதக்கத்
துல்லாஹ் ஸாஹிப்
பாக்கவி அவர்கள்
கவிதையாக எழுதியுள்ள
இந்நூலைப் படித்துப்
பார்த்தேன்.
நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை
சரியான சரித்திரக்
குறிப்புகளோடு
எழுதியுள்ளார்.
துவக்கத்தில்
நபியின் வரலாற்றினை
அழகுற விளக்கப்பட்டிருப்பது
மிகவும் பாராட்டுதற்குரியது.
இவ்வுலகத்தில்
இறைவனால் அனுப்பப்
பெற்ற நாயகமவர்கள்
மக்கள் அனைவருக்கும்
ஏகதெய்வக்
கொள்கையைப்
புகட்டுவதற்காகவே
அனுப்பப்பட்டனர்.
இத்தகைய நாயகக்
காவியத்தை
முறையாக ஆசிரியர்
தமது இந்நூலில்
விளக்குவது எவரும்
எளிதில் புரியக்கூடியதாக
இருக்கிறது. நிறைய
கஷ்டங்களை
மேற்கொண்டு
திறம்பட நாயகத்
திருமேனியின்
சரித்திரத்தை
எளிய கவிதைகளைக்
கொண்ட தமிழ்க்
காவியமாக தரக்கூடிய
முயற்சியில்
இதுவே இந்த நூற்றாண்டின்
முதன்மையானதெனக்
கருதுகிறேன்.
பாக்கவி ஒருவர்
இப்பணியை மிகவும்
திறம்படச்
செய்திருப்பது
மகிழ்ச்சிக்குரியது;
மற்றவர்களுக்கும்
இது வழிகாட்டக்
கூடியது.
நூலாசிரியர்
மேலும் பல நல்ல
நூல்களைத் தமிழகத்திற்குத்தர
இறைவனை இறைஞ்சுகின்றேன்.
தமிழறிந்த
யாவரும் இந்நூலை
வாங்கிப் படித்துப்
பயன் அடைவதுடன்
ஆசிரியருக்கும்
ஊக்கம் ஊட்டுவார்களாக!
வேலூர்
|