பக்கம் எண் :

4

amaani
நெஞ்சில் நிறைந்த நபிமணி
சான்றுரைகள் தந்த மார்க்க அறிஞர்கள்

லால்பேட்டை, மத்ரஸயே மன்பஉல் அன்வார்
அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், இந்நூலாசிரியரின்
ஆசிரியருமாகிய, மௌலானா மௌலவி அல்ஹாஜ்
உஸ்தாதுல் அஸாத்திதா, ஷைகுல் மில்லத், முப்தி
அல்லாமா ஜியாவுத்தீன் அஹ்மத் அமானி
ஹலரத் கிப்லா மர்ஹூம் அவர்கள்

மௌலவி G. முஹம்மது ஸதக்கத்துல்லாஹ் சிராஜ் பாக்கவி அவர்கள் எழுதிய “நெஞ்சில் நிறைந்த நபிமணி” என்ற நூலின் பல பகுதியைப் பார்வை செய்தேன். யாவரும் எளிதில் விளங்கிக்கொள்ளும் முறையில், மிக எளிய நடையில் நம் ஒப்பற்ற அருமை நாயகம் ஹலரத் நபி முஹம்மது - ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் - அவர்களின் அதி அற்புத வாழ்க்கை வரலாற்றை ஒழுங்கான விதத்தில் எழுதி இருக்கிறார்.

அரிய இம்முயற்சியால் நபிகள் நாயகம் அவர்களின் அழகிய முன்மாதிரி அடங்கிய வாழ்க்கை விவரங்களை தமிழ் அறிந்த மக்கள் அனைவரும் நன்கு புரிந்து கொண்டு பயன் பெறுவார்களாக! அல்லாஹுதஆலா பாக்கவி அவர்களுக்கு பல்வளத்தையும் தந்து இஸ்லாமிய இலக்கியப் பணியைத் திறம்படச் செய்துவர தனது பேரருளைச் சொரிவானாக! ஆமீன்.

 

லால்பேட்டை
24-5-63. -

ஜியாவுத்தீன் அஹ்மத அமானி