ஒருகுறை இல்லா
வண்ணம்
உளத்தமர்
முஹம்ம தைத்தான்
பெருமையாய் வளர்த்து
வந்த
பெற்றியும்
பெரிதே நெஞ்சே
சோதனை தொடர்ந்து
வாழ்வில்
சொல்லொணாத்
துக்கம் தந்தே
வாதனை அளிப்ப
தேதான்
வாழ்வது
போலும் நெஞ்சே
உத்தமர் முத்த
லீபும்
உடல்நல
வளமி ழந்தே
மெத்தவும் வருத்த
முற்றே
மேனித
ளர்ந்தார் நெஞ்சே
கண்ணுக்குள் மணியைப்
போலக்
காத்துவந்
திட்ட பேரன்
எண்ணத்தால்
ஏக்க முற்றே
ஏதேதோ
உரைத்தார் நெஞ்சே
எட்டாண்டு வயதை
அன்னார்
எட்டியே
பிடித்த போதும்
ஒட்டிய துன்பங்
கொண்ட
உளத்தோடு
நின்றார் நெஞ்சே
பக்கலில் முஹம்ம
தைத்தான்
பரிவுடன்
அமர வைத்தே
துக்கத்தால்
வருந்தி அங்கு
துடிதுடித்
தாரே நெஞ்சே
தன்னரும் மக்க
ளுக்குள்
தகுதியும்
அன்பும் வாய்ந்த
இன்‘அபு தாலி’
பின்பால்
இணைத்திட
லானார் நெஞ்சே
முகம்மதைக் காப்ப
தற்கு
முனைந்துமே
ஆர்வ முற்ற
தகவுடை அபுதா
லீபின்
தன்மையும்
என்னே நெஞ்சே
பேரனை அவர்பால்
தந்து
பிரியமாய்
வளர்க்கச்
சொல்லிப்
பாரினை நீத்தே
அன்னார்
பறந்திட
லானார் நெஞ்சே
பாட்டனை இழந்தே
அங்கு
பார்ப்பவர்
உருகு வண்ணம்
வாட்டமுற் றாரே
செல்வர்
வாழ்க்கையும்
என்னே நெஞ்சே
உற்றவர் எவரு
மின்றி
உள்ளத்தில்
சோர்ந்த போதும்
மற்றவர் இறைவ
னாலே
மகிழ்ச்சியைக்
கொண்டார்
நெஞ்சே
இறையருள் வலிமை
யாலும்
இதயத்தின்
ஒளியி னாலும்
குறையிலும் குறையே
இன்றி
கோமகன்
வளர்ந்தார்
நெஞ்சே
தன்னிடம் வந்த
மைந்தன்
தாய்,தந்தை
அற்றோர் என்றே
அன்புடன் அபுதா
லீபும்
அணைத்துளம்
மகிழ்ந்தார்
நெஞ்சே
அன்பினில் தாயைப்
போல
அணைப்பினில்
தந்தை போல
இன்புடன் அபுதா
லீபும்
இருந்துவந்
தாரே நெஞ்சே
எங்கவர் சென்ற
போதும்
ஏற்றமாய்
அழைத்துச் சென்றே
அங்குள புதுமை பற்றி
அறைந்திட
லானார் நெஞ்சே
ஆவும்நற் கன்றும்
போல
அன்புடன்
இணைந்தி ருந்த
மேவிய காட்சி
தன்னை
விளக்கிட
லாமோ நெஞ்சே
|