பக்கம் எண் :

34

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

துன்பம் சுமந்த துணிவுடை வீரர்

அடைக்கலம் புகுதல்


அல்லல்பட்ட முஸ்லிம்கள் அபிசீனியாவில்
   அடைக்கலம் புகுவதாயினர்

என்றாலும் பகைவர் கொண்ட
     எண்ணத்தில் மீள்வ தற்கே
அண்ணலோர் வழியைத் தேடி
     ஆய்ந்திட லானார் நெஞ்சே


தம்முடை நண்பர் கட்குத்
     தக்கவோர் காப்ப ளிக்க
செம்மைசேர் அண்ணல் செய்த
     சீர்வழி கேளாய் நெஞ்சே


அண்மையில் இருந்த நாடாம்
     அபிசீனி யாவில் வாழ
வண்மைசேர் *நஜ்ஜா ஷீபால்
     அனுப்பியே மனம்நி றைந்தார்

*நஜ்ஜாஷி - அபிசீனிய நாட்டு மதிநுட்பம் வாய்ந்த மாமன்னர்


அதிகத்துன் பத்தைப் பெற்றே
     அல்லலில் ஆழ்ந்த மக்கள்
பதிவிட்டு, உறவை விட்டுப்
     பிரிந்திட லானார் நெஞ்சே