தோழர்கள்
சூழ வெற்றித்
திருமுகம்
பொலியத் தூதர்
வாழிய ! என்போர்
வாழ்த்தில்
மகிழ்ந்திட
லானார் நெஞ்சே
பத்ரென்னும்
இடத்தை விட்டுப்
பாங்குறு
மதினா நோக்கி
உத்தம நபிதான்
வந்த
உவப்பதும்
என்னே நெஞ்சே
மதினாவை அடைந்த
வள்ளல்
மாண்புறு
பள்ளி சென்றே
முதல்வனின்
அன்பை எண்ணி
முடிதாழ்த்தித்
தொழுதார் நெஞ்சே
ஒப்பிலா இறைவா
! உன்றன்
உயர்திருக்
கருணை என்னே
!
இப்பெரும் வெற்றி
உனதே
என்றிட
லானார் நெஞ்சே
அண்ணலைக் கண்ட
மக்கள்
அடைந்தபேர்
இன்பந் தன்னை
என்னவென் றுரைக்க
வல்லேன்
எல்லையில்
இன்பம் நெஞ்சே
இருபக்கம் சூழ்ந்த
மக்கள்
இறையாட்சி
தந்தோய்! என்றே
பெருங்கடல் ஒலிஎ
ழுப்பிப்
பேரின்பம்
கண்டார் நெஞ்சே
|