பக்கம் எண் :

54

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

வெற்றியில் நிறைந்த வியத்தகு மேதை

குபைப் கொல்லப்படல்


இருவரை அருக மர்த்தி -
    இணையிலா நபிதான் ஆங்கே
நறுமண நீர்தெ ளித்து
    நல்லாசி தந்தார் நெஞ்சே

மகளும்தம் மருகர் தாமும்
    மகிழ்ச்சியில் நீந்தக் கண்டே
முகமலர்ந் திட்ட அண்ணல்
    மொழிந்ததைக் கேளாய் நெஞ்சே

புத்தொளி கொண்ட இந்தப்
    பொற்புறு குடும்பம் என்றும்
சத்தியத் திற்கே அன்பால்
    சார்கஎன் றாரே நெஞ்சே

அலி, பாத்தி மாம ணத்தால்
    அன்புறு மதினா மக்கள்
பொலிவுறு இன்பங் கண்ட
    பொற்துபம் என்னே நெஞ்சே