மார்க்கத்தின்
மாண்பும் அல்லாஹ்
மறையதன்
மாண்பும் எங்கும்
தீர்க்கமாய்ப்
பரவிச் சென்றே
திகழ்ந்ததைக்
கேளாய் நெஞ்சே
அண்ணல்இம் மாண்பி
சைத்தே
அண்டைய
நாட்டார் இந்தப்
புண்ணிய இஸ்லாம்
சாரப்
புதுவழி தேர்ந்தார்
நெஞ்சே
எகிப்தபி சீனி
யா,ரோம்,
ஏற்றஞ்சேர்
பார சீகம்,
மிகுபுகழ் சிரியா
வுக்கே
கடிதங்கள்
விடுத்தார்
நெஞ்சே
*அந்நாட்டு
அரச ரெல்லாம்
அண்ணலின்
கடிதங் கண்டே
தன்நாட்டுத்
தூத னுப்பித்
தந்திட
லானார் நெஞ்சே
* (1) ரோமானியப்
பேரரசர் ஹிர்க்கல்
(Heraclius) (2) டெமாஸ்கஸின்
காவலர் ஹாரிஸ்-பின்
அபீஷுமர், (3) பாரசீக
மன்னர் கிஸ்ரா
அப்ரூயஸ்-பின்ஹுர்முஸ்
(Cbosroes Eparw’z. (4) எகிப்து
நாட்டு மாமன்னர்
ஜுரைஜ்-பின்-மீனா
முகவ்கிஸ் கிப்தி
(Pkauchios), (5) அபிசீனிய
மன்னர் நஜ்ஜாஷில்
அஸ்ஹம்-பின்-அப்ஜர்,
(6) யாமா நாட்டு
அதிபர் ஹவ்தா-பின்-அலிய்யில்
ஹனபி, (7) பஹ்ரைன்
தேயத்து மன்னர்
முன்திர்-பின்-ஸாவா
தைமீ, (8) யமனை
அடுத்துள்ள ‘உமான்’
நகரத்து அதிபதியான
ஜைபர் போன்ற
அரசர்களுக்கும்
அதிகாரிகளுக்கும்
இஸ்லாமிய மார்க்க
நெறிமுறைகளைக்
கடிதங்கள் மூலம்
அண்ணலார் எடுத்து
விளக்கி விளக்கி
இஸ்லாமில்
இணைந்து ஏக தெய்வக்
கொள்கையில்
ஒன்றாகுமாறு
அழைப்பு விடுத்தார்கள்.
எகிப்து மன்னர்
முகவ்கிஸுக்கு
எழுதிய கடிதம்
கி. பி. 1858-ஆம் ஆண்டில்
எகிப்திலுள்ள
கிறிஸ்துவ மடம்
ஒன்றில் கண்டு
பிடிக்கப்பட்டது.
இஸ்தம்பூலிலுள்ள
அரண்மனையில்
அது இன்றும் இருந்து
வருகிறது.
இந்த இஸ்லாமியப்
பேரழைப்புகள்
ஹுதைபிய்யா
உடன்படிக்கைக்குப்
பிறகு-மக்கா
வெற்றிக்கும்
முந்தி விடுக்கப்பட்டன.
சிலர் அழைப்பிற்
கிணங்க மனமொப்பினர்;
சிலர் வெகுமதிகளை
அண்ணலுக்கு அனுப்பி
மரியாதைப் படுத்தினர்;
இன்னும் சிலர்
கடிதங்களைக்
கிழித்தெறிந்து
பகை கொண்டனர்.
வந்தஅத் தூதர்
எல்லாம்
வாய்மைசேர்
இஸ்லாம் மார்க்க
அந்தஞ்சேர்
கொள்கை பற்றி
அறிந்துசென்
றாரே நெஞ்சே
அண்ணல்பால்
பேச வந்தோர்
அவர்முன்னம்
மாறிச் சென்ற
எண்ணரும் வியப்பைப்
பற்றி
எடுத்துரைப்
பதுவோ நெஞ்சே!
எகிப்திய மன்னர்
அந்த
எழில்மிகு
கடிதங் கொண்ட
மகிமையை அறிந்த
அந்த
மாண்பதும்
என்னே நெஞ்சே
அண்டைய நாட்டில்
எல்லாம்
அரியநல்
இஸ்லாம் மார்க்கம்
கொண்டநல் மாண்பை
இங்கு
கூறுவ தாமோ
நெஞ்சே
திரைமறைவில்
குறைஷியர்கள்
தீமை செய்வதாயினர்
ஒப்பந்த நெறியின்
வண்ணம்
ஓய்ந்துமே
பகைவர் கள்தாம்
அப்பொழு திருந்த
போதும்
அல்லல்கள்
தந்தார் நெஞ்சே
ஹுதைபிய்யா
உடன்ப டிக்கை
உதித்தத
னாலே அன்னார்
எதிர்த்திட
முடியா வண்ணம்
ஏங்கிட
லானார் நெஞ்சே
மறைமுக மாக அந்த
மமதைசேர்
குறைஷி மக்கள்
திரைமறை வாகச்
செய்த
தீமைகள்
கேளாய் நெஞ்சே
யூதர்கள் தம்மைத்
தூண்டி
உம்பகை
முஹம்ம தென்றே
வேதனை தந்த தைத்தான்
விளம்பிட
லாமோ! நெஞ்சே
முகம்மதின்
நெறிதான் இங்கே
முளைத்துமே
தழைத்த தென்றால்
மிகமிகத் துன்பம்
என்றே
மேலும்சொன்
னாரே நெஞ்சே
வட்டியை மறுக்கும்
அந்த
வலிமைசேர்
‘மார்க்கம்’
வந்தால்
கட்டாயம் துன்பம்
என்றே
கருத்தினைச்
சொன்னார்
நெஞ்சே
|