யூதர்கள் ஒன்று
சேர்ந்தார்
யூகமாய்க்
கருவி சேர்த்தார்
ஏதஞ்செய் போருக்
கென்றே
எழுந்திட
லானார் நெஞ்சே
கைபர்என் றோம்
அந்தக்
கவினார்ந்த
கோட்டை கள்முன்
கைபார்த்து விடுவோம்
என்றே
கருதிட
லானார் நெஞ்சே
அண்ணல்இச் செய்தி
தன்னை
அறிந்ததும்
மதினா வைநாம்
கண்ணெக் காப்போம்
என்றே
கடன்புரிந்
தாரே நெஞ்சே
தோழர்கள்
தமைஅ ழைத்தார்
துணிவுடன்
வெளியே வந்தார்
ஆழிபோல் யூதர்
ஆங்கே
அணிவகுத்
தாரே நெஞ்சே
இருபதா யிரம்பேர்
ஆங்கே
எழுந்துமே
கொக்க ரித்துப்
பொருதிட வந்து
நின்றே
போரொலி
செய்தார் நெஞ்சே
அப்பக்கம் ஆழி
போன்றோர்;
ஆயிரத்
தறுநூ றேபேர்
இப்பக்கம் நின்று
போரில்
இறங்கிட
லானார் நெஞ்சே
படைபலம் பெரிய
தென்றும்
பணபலம்
நம்பால் என்றும்
கடலெனத் திரண்ட
யூதர்
களித்திட
லானார் நெஞ்சே
பாரொலி எழுப்பி
னாற்போல்
படைகள்தாம்
ஒன்றோ டொன்று
போரொலி எழுப்பி
ஆங்கே
பொருதிட
லானார் நெஞ்சே
உடலங்கள் சரிந்து
வீழ
உள்ளங்கள்
அச்சங் கொள்ளப்
படைகள்தாம்
மோதி நின்ற
பயங்கரம்
பெரிதே நெஞ்சே
புயலினைப் பொருத
வந்த
புல்லிதழ்
போன்றே ஆங்கே
பயமிகு யூதர்
கூட்டம்
பதைத்ததும்
என்னே நெஞ்சே
முஸ்லிம்கள்
வாளிள் முன்னே
முன்னேற
முடியா வண்ணம்
முஸ்லிம்கள்
வாளுக் கன்னார்
முடிதாழ்த்த
லானார் நெஞ்சே
தோற்றிட்ட
யூதர் எல்லாம்
துவண்டுமே
அண்ண லின்பால்
சாற்றிய ஒப்பந்
தத்தைத்
தருகின்றேன்
கேளாய் நெஞ்சே
வருஷத்து விளவு
தன்னை
வகுத்துமே
பாதி கப்பம்
தருவதாய்ச்
செய்து கொண்ட
தன்மைதான்
என்னே நெஞ்சே
புழுங்கிய குறைஷி
யர்தாம்
பொல்லாத
முஸ்லிம் என்றே
அழுந்திய பகைமை
தன்னால்
அனலென ஆனார்
நெஞ்சே
யூதர்கள் வெல்வார்
என்றே
யூகித்த
குறைஷி மக்கள்
வேதனைக் கடலில்
வீழ்ந்த
விந்தையைப்
பாராய் நெஞ்சே
|