பக்கம் எண் :

6

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

மதிப்புரைகள் வழங்கிய மாமேதைகள்

உயர்திரு ராஜாஜி அவர்கள்

மௌலவி சிராஜ் அவர்கள் பக்தியும் தமிழன்பும் கொண்டு இயற்றி இருக்கும் “நெஞ்சில் நிறைந்த நபிமணி” அனைவருக்கும் பயன்படும் நூல் என்பதில் ஐயமில்லை.

தமிழ் நாட்டிலுள்ள எல்லா மதத்தினருக்கும் உரிமையான தமிழில் நபி நாயகருடைய வரலாறு மிக எளியதும் சுத்தமுமான நடையில் தமிழர் அனைவரும் படித்துப் பயனடையும் முறையில் வெளியாகி இருக்கிறது.

எந்த மதத்தினரும் படித்தும் நாட்டில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்த்தும் உணர்ச்சி அடைவார்களாக!

தமிழ் இலக்கியத்துக்கு இது ஒரு நல்ல ஆர்ஜிதமாகும்.

சென்னை-17
10-10-63

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி