பக்கம் எண் :

60

NABIGAL
 நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

வெற்றியில் நிறைந்த வியத்தகு மேதை

மக்கா வெற்றி


ஓராண்டு முடிவ தற்குள்
    ஒப்பந்தத் தைமு றித்தே
ஏராள மான துன்பைக்
    குறைஷியர் இழத்தார் நெஞ்சே


மக்காவில் முஸ்லி மான
    மக்களை நாடோ றும்தான்
துக்கத்தில் ஆழ்த்தி அன்னார்
    துடித்திடச் செய்தார் நெஞ்சே


இழிவான பாக்கள் செய்தே
    இணையிலா நாய கத்தைப்
பழிதீர்ப்போம் என்று சொல்லிப்
    பரிகாசம் செய்தார் நெஞ்சே

இவைகளைக் கண்ட அண்ணல்
    இதயத்துள் உறுதி கொண்டே
நவசக்தி உற்ற தைப்போல்
    நவின்றதைக் கேளாய் நெஞ்சே

அன்பர்கள் தமைய ழைத்தார்
    அகத்தினில் நினைத்த வற்றை
இன்புடன் இயம்ப லானார்
    எடுத்துரைக் கக்கேள் நெஞ்சே


தாயகம் மக்கம் காக்கத்
    தயங்காமல் எழுவீர் ! என்றே
நேயமாய் எடுத் ரைத்த
    நேர்த்தியைப் பாராய் நெஞ்சே


மதினாவைக் காத்த தைப்போல்
    மக்காவைக் காப்போ மென்றே
பதினாயி ரம்பே ரோடு
    பான்நபி எழுந்தார் நெஞ்சே


என்றுநாம் செல்வோம் என்றே
    ஏழாண்டு பிரிந்தி ருந்தோர்
அன்றைக்குக் கொண்ட இன்பை
    அளந்திடல் எளிதோ? நெஞ்சே

தாயக மண்ணைக் காணத்
    தாங்கொணா ஆர்வங் கொண்டோர்
நாயக மொழியக் கேட்டே
    நல்லின்ப முற்றார் நெஞ்சே


மக்கத்தின் உணவை உண்டு
    மகிழ்ந்திடும் இன்பிற் காக
மிக்கவும் ஆர்வங் கொண்டே
    மிதந்திட லானார் நெஞ்சே


மாணெழில் அண்ணல் வந்த
    மாண்புறு மக்கந் தன்னைக்
காணப்போ கின்றோம் என்றே
    களித்திட லானார் நெஞ்சே


நாயகி கதிஜா வாழ்ந்த
    நல்லில்லம் அதனைக் காண
நேயஞ்சேர் மதினா மக்கள்
    நினைந்தெழ லானார் நெஞ்சே

சொர்க்கத்தை நோக்கிச் செல்லும்
    சுந்தரப் பயணம் போன்றே
நிற்கதி யாயி ருந்தோர்
    நிறைமனம் கொண்டார் நெஞ்சே


அணிஅணி யாக மக்கள்
    அனைவரும் மக்கம் நோக்கி
கனிவுடன் சென்ற அந்தக்
    காட்சியும் பெரிதே நெஞ்சே


சுமையுடன் சென்ற அந்தச்
    சுந்தரப் பரிகள் தாமும்
குமையும்ஓர் கவலை இன்றிக்
    குதித்துச்சென் றதுவே நெஞ்சே


உவகையைக் கண்டு கொண்ட
    ஒட்டகக் கூட்டங் கூடக்
கவர்ச்சியாய் நடைப யின்ற
    காட்சிதான் என்னே நெஞ்சே

எழிற்பெரும் முஸ்லிம் மக்கள்
    ஏகிடும் போதே ஆங்கு
வழியினில் இருவர் சொன்ன
    வாயுரை கேளாய் நெஞ்சே


பொங்கிடும் கடலைப் போல
    புறப்பட்ட இவர்கள் எல்லாம்
எங்கேசெல் கின்றார்? என்றே
    ஒருவன்கேட் டிட்டான் நெஞ்சே


குறைஷியர் ஒப்பந் தத்தைக்
    குலைத்தனர் ; எனவே இந்த
நிறைபடை மக்கம் நோக்கி
    நீள்கின்ற தென்றான் நெஞ்சே


கொடுத்தவாக் குறுதி தன்னைக்
    கொன்றுமே மாறு செய்தால்
எடுப்புடை அரபி யர்க்கே
    ஏற்குமோ? என்றான் நெஞ்சே

முகம்மதின் வளர்ச்சி கண்டு
    முரண்கொண்ட குறைஷி மக்கள்
பகைகொண்டார் என்றே மற்றோன்
    பகர்ந்திட லானான் நெஞ்சே

கொடுமைகள் செய்வோ ருக்குக்
    குவலயந் தன்னில் என்றும்
கொடுமைதான் வாய்க்கும் என்றே
    கூறிச்சென் றானே நெஞ்சே


மக்கா அடுக்கும் படையினரை மலையெலாம் நிறைந்து இருக்குமாறு மாநபி அவர்கள் பணித்தார்கள்.

முன்னேறி முஸ்லிம் மக்கள்
    முனைந்துமே செல்லத் தீயோர்
என்னசெய் வதுவென் றோதி
    ஏங்கிட லானார் நெஞ்சே


மக்கத்தின் அருகில் செல்ல
    மாநபி படையைப் பார்த்துத்
தக்கதோர் யுக்தி தன்னைத்
    தந்திட லானார் நெஞ்சே

பத்தாயி ரம்பேர் நீங்கள்
    பரவியே மலையில் தங்கிப்
புத்தொளி அடுப்பு மூட்டிப்
    பொங்குக ! என்றார் நெஞ்சே


அண்ணல்இவ் வாறு சொல்ல
    ஆணையை ஏற்றோர் எல்லாம்
எண்ணிலா உவகை மேவ
    எரிமூட்ட லானார் நெஞ்சே


மக்கத்தில் இருந்த வண்ணம்
    மலையினைப் பார்த்த தீயோர்
மிக்கவும் கதிக லங்கி
    மிரண்டிட லானார் நெஞ்சே


கண்ணுற்ற குறைஷி மக்கள்
    கலங்கிட லானார் மற்றும்
எண்ணிலாக் கூட்டம் தானோ?
    என்றெண்ண லானார் நெஞ்சே

மலையெலாம் நெருப்பே யென்றால்
    மாபெரும் படையோ? வென்றே
மலைத்திட்ட குறைஷித் தீயோர்
    மனமெரிந் தாரே நெஞ்சே


எண்ணவே முடியா வண்ணம்
    எதிரிகள் வந்துள் ளாரே;
என்னநாம் செய்வ தென்றே
    ஏங்கிட லானார் நெஞ்சே

இப்பெரும் படையை நாமும்
    எங்ஙனம் எதிர்ப்ப தென்றே
கப்பிய கவலை யோடு
    கலங்கிட லானார் நெஞ்சே

ஆகவே குறைஷி மக்கள்
    அண்ணலை எதிர்ப்ப தென்ற
தாகத்தைப் போக்கிக் கொண்டு
    தலைகுனிந் தாரே நெஞ்சே

அண்ணல்பால் தூது ரைக்க
    அபுசுப்யான் தனைஅ னுப்ப
எண்ணினர், அவரும் ஒப்பி
    எழுந்திட லானார் நெஞ்சே


முன்செய்த ஒப்பந் தத்தை
    முறித்தனம்; அதனை மாற்றி
முன்போல்உ டன்ப டிக்கை
    மொழிக!என் றுரத்தார் நெஞ்சே


இப்பெரும் பணியைச் செய்ய
    ஏற்றவர் நீரே என்ன -
அப்பெரும் பணியை ஏற்றே
    அபுசுப்யான் வந்தார் நெஞ்சே


அபயம்நான் அபயம் என்றே
    அண்ணலின் அணிபு குந்து
நபியெங்கே? என்றி ருட்டில்
    நாடியே கேட்டார் நெஞ்சே

அக்குரல் தன்னைக் கேட்டே
    ஆர்அங்கே? என்ற வண்ணம்
பக்கத்தில் *அப்பாஸ் வந்த
    பக்குவம் கேளாய் நெஞ்சே

* அப்பாஸ் - Abbas - அண்ணலாரின் மற்றுமொரு பெரிய தந்தை.

அப்பாசின் குரலைக் கேட்டே
    அபுசுப்யான், உடன்ப டிக்கை
தப்பிய தாலே எம்மைத்
    தாக்கவோ? என்றார் நெஞ்சே

ஆம்! நாளை மக்கா வந்தே
    ஆங்குள்ள ‘கஅபா’ வுக்குள்
யாம்தொழு திடுவோம் என்றே
    அறைந்திட லானார் நெஞ்சே

இந்தஏற் பாடு தன்னை
    எவர்எதிர்த் திட்ட போதும்
அந்தநே ரத்தில் போர்தான் ;
    அறிக! என் றுரைத்தார் நெஞ்சே


அஞ்சிய அபுசுப் யானும்
    அன்பரே ! அதனை மாற்ற
வஞ்சனை யின்றிக் கேட்டேன்
    வழிசொல்க ! என்றார் நெஞ்சே

அப்படி யாயின் நானும்
    அன்புடன் வழியு ரைப்பேன்
தப்பாமல் அதனைச் செய்தால்
    தப்பலாம் என்றார் நெஞ்சே

தவறாமல் செய்வேன் என்றே
    தாழ்ந்துமே பணிந்து நின்ற
கவலைசேர் அபுசுப் யானும்
    கழறிய தென்னே நெஞ்சே

அண்ணல்பால் அழைத்துச் செல்வேன்
    அவருடன் சிறிது நேரம்
இன்னுரை செய்க ! பின்பே
    இயம்புவேன் என்றார் நெஞ்சே

அப்பாசின் அடிதொ டர்ந்தே
    அபுசுப்யான் நடந்து சென்ற
அப்பெரும் காட்சி தன்னை
    அறைந்திடக் கேளாய் நெஞ்சே

கணக்கிலாக் கூடா ரத்தைக்
    கண்டுமே அஞ்சி அஞ்சி
மனத்தினில் அச்சத் தோடு
    மருண்டுதான் சென்றார் நெஞ்சே

அண்ணல்கூ டாரத் திற்குள்
    அபுசுப்யான் வரவும் அண்ணல்
எண்ணிலா உவகை மேவ
    இன்முகம் அளித்தார் நெஞ்சே

அண்ணலைப் பார்த்த தும்தான்
    அதிசயம் தன்னில் வீழ்ந்தே
எண்ணத்தில் மாற்றம் கொண்டே
    இருந்திட லானார் நெஞ்சே

குறைஷியர் தூதாய்ச் செய்தி
    கொண்டுவந் துள்ளார்; தாங்கள்
அறிவுரை அருள்க! என்றே
    அப்பாஸும் உரைத்தார் நெஞ்சே

அம்மொழி தன்னைக் கேட்டே
    அண்ணலின் முகம லர்ந்த
விம்மிதக் காட்சி தன்னை
    விளக்கிடல் எளிதோ? நெஞ்சே

அன்பரே ! வருக ! உம்பால்
    அன்பினால் சொல்லு கின்றேன்
இன்னல்சேர் மூர்க்கம் தன்னில்
    இருப்பதோ? என்றார் நெஞ்சே

பற்பல தெய்வங் கொண்டு
    பற்பல பிரிவாய் நின்றே
அற்பத்தில் அற்ப மாதல்
    அழகோ?என் றுரத்தார் நெஞ்சே

ஒற்றுமை இல்லா வாழ்வில்
    உள்ளத்தைக் கெடுத்துக் கொண்டே
வெற்றுக்கு வாழ்வ தில்தான்
    வெற்றியோ ? என்றார் நெஞ்சே

ஒன்றேநம் இறைவன் என்றே
    ஒப்பிலாக் கொள்கை ஏந்தி
நன்றேநாம் வாழ்வ தாலே
    நலிவுண்டோ ? என்றார் நெஞ்சே

பிரிவினை இல்லா வண்ணம்
    பேரன்பில் ஒன்று பட்டே
அருளுணர் வோடு வாழ
    அழைக்கின்றேன் என்றார் நெஞ்சே

கருணைசேர் விழியால் நோக்கிக்
    கனிவுரை தந்த அண்ணல்
பெருநிலக் காட்சி கண்டே
    பிணைந்திட லானார் நெஞ்சே

அண்ணலின் அமுதப் பேச்சில்
    அகமதைப் பறிகொ டுத்தே
புண்ணியப் பேறு பெற்ற
    புனிதத்தைப் பாராய் நெஞ்சே


அபுசுப்யான் அண்ணல் வாக்கின்
    அருமையை உணர்ந்த தோடு
நபியே!நும் மார்க்கம் தன்னில்
    “நான்சேர்ந்தேன்” என்றார் நெஞ்சே

அண்ணலே ! இன்றே நான்நும்
    அடிமைதான் என்று கூறி
அண்ணலின் அன்பில் ஆழ்ந்தே
    ஆனந்தம் கொண்டார் நெஞ்சே

இந்தநற் செய்தி கேட்டே
    இருந்தபல் தோழ ரெல்லாம்
சிந்தையில் கொண்ட இன்பைச்
    செப்பிடல் எளிதோ ? நெஞ்சே

இறைவனின் அருளால் இந்த
    இன்பத்தைப் பெற்றோம் என்றே
நிறைஇன்பம் கொண்ட அன்னார்
    நெஞ்சுவந் தாரே நெஞ்சே


அண்ணலின் வழிபி ணைந்த
    அபுசுப்யான் அடுத்தே தாங்கள்
எண்ணுவ தென்ன? வென்றே
    எதிர்வந்து நின்றார் நெஞ்சே


மார்க்கத்தில் இணைந்து விட்ட
    மாண்புடைப் பெரியீர் ! இஸ்லாம்
ஏற்றத்தைப் பரப்பு தற்கே
    எழுக!என் றுரைத்தார் நெஞ்சே

அன்பதன் பெருமை கூறும்
    அரும்வழி இதனை ஏற்றீர்;
இன்புடன் அதனைப் பற்றி
    இயம்புக! என்றார் நெஞ்சே

ஓடியே அவரைப் பற்றி
    உலுக்கியே இரக்க மின்றி
தாடியைப் பிய்த்தி ழுத்த
    தன்மையப் பாராய் நெஞ்சே

பொறுமையே இல்லா வண்ணம்
    போர்செய்வோம் ; எழுவீர் ! என்றே
பெருங்குரல் பாய்ச்சி அன்னாள்
    பேசிய தென்னே நெஞ்சே

பெண்ணுரு தன்னில் வந்தே
    பேயாட்டம் ஆடி நின்றாள்
எண்ணற்றோர் அவளைப் பார்த்தே
    இயம்பிய தைக்கேள் நெஞ்சே

உன்மொழி தன்னைக் கேட்டால்
    ஒழிந்திட வேண்டும் என்றே
அன்புடன் பலர்தான் சொன்ன
    அதிசயம் பாராய் ! நெஞ்சே

பொருதுதல் இல்லா வண்ணம்
    பொற்புறு நகரை மீட்கக்
கருதிய அண்ணல் அந்தக்
    கருத்தினை ஏற்றார் நெஞ்சே


நல்ல நல்ல தென்றே
    நம்அண்ணல் வழிய னுப்ப
எல்லையில் இனபம் மேவ
    ஏகிட லானார் நெஞ்சே


குறைஷியர் அபுசுப்யானின் வருகயை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர்

தலைவராம் அபுசுப் யானைத்
    தேடிய குறைஷி மக்கள்
தலைமகன் வருகை யாலே
    தாவிட லானார் நெஞ்சே


குறைஷிய நண்பர் காள்! நான்
    குணமணி நாய கத்தை
நிறைவுடன் கண்டேன்; கண்ட
    நிகழ்ச்சியைச் சொல்வேன் என்றார்

அண்ணலைக் கண்ட பின்னர்
    அவர்மொழி தன்னைக் கேட்டேன் ;
எண்ணத்தைப் பறிகொ டுத்தேன்
    என்றிட லானார் நெஞ்சே


அண்ணலின் முன்னே நானும்
    அன்புடை ‘இஸ்லாம்’ தன்னில்
எண்ணியே சேர்ந்தேன் என்றே
    இயம்பிட லானார் நெஞ்சே


அவர்வழி சேர்வ தாலே
    அனைவரும் உய்வோ மென்றே
அவர்கள்பால் எடுத் ரைக்க
    அமைதியில் ஆழ்ந்தார் நெஞ்சே

சிற்சிலர் சீற லானார்
    சிற்சிலர் எழுவ தானார்
கற்சிலை போன்றே பல்லோர்
    கலங்கிட லானார் நெஞ்சே

அபுசுப்யான் கூற்றைக் கேட்ட
    அவருடய மனைவி ஆங்கே
அபுசுப்யான் அஞ்சும் வண்ணம்
    அறைந்திட லானாள் நெஞ்சே


கொண்டவர் ஆயிற் றென்றே
    கொஞ்சமும் பாரா வண்ணம்
மண்டிய இருள்ம னத்தாள்
    வடித்ததைக் கேளாய் நெஞ்சே


கிழமான இவனின் பேச்சக்
    கேட்காதீர் ! என்றும் பேச்சில்
வழவழ என்பான் என்றே
    வைதிட லானாள் நெஞ்சே

ஒப்பந்தம் செய்யச் சென்றே
    உறுதிஇல் லாமல் நெஞ்சை
ஒப்பித்து வந்தான் என்றே
    உறுமிட லானாள் நெஞ்சே

ஓடியே அவரைப் பற்றி
    உலுக்கியே இரக்க மின்றி
தாடியைப் பிய்த்தி ழுத்த
    தன்மையைப் பாராய் நெஞ்சே

பொறுமையே இல்லா வண்ணம்
    போர்செய்வோம் ; எழுவீர் ! என்றே
பெருங்குரல் பாய்ச்சி அன்னாள்
    பேசிய தென்னே நெஞ்சே

பெண்ணுரு தன்னில் வந்தே
    பேயாட்டம் ஆடி நின்றாள்
எண்ணற்றோர் அவளைப் பார்த்தே
    இயம்பிய தைக்கேள் நெஞ்சே

உன்மொழி தன்னைக் கேட்டால்
    ஒழிந்திட வேண்டும் என்றே
அன்புடன் பலர்தான் சொன்ன
    அதிசயம் பாராய் ! நெஞ்சே

இவ்வாறு இவர்கள் எல்லாம்
    இயம்பியே நிற்க ஆங்கே
செவ்விய அண்ணல் மக்கம்
    சேர்ந்திட லானார் நெஞ்சே

அடையாத இல்லம் போன்றே
    அழைத்திடும் மக்கம் வந்தே
கொடையாள னுக்கே நன்றி
    கூறிட லானார் நெஞ்சே


பற்பலர் ஓடி வந்தே
    பாங்குறு நபியைப் பார்க்க
நற்பேறு என்றே சொல்லி
    நட்பினைக் கொண்டார் நெஞ்சே

குறைஷியர் கூட்டந் தன்னில்
    குதூகலங் கொண்டார் பல்லோர் ;
நிறைவிலா நெஞ்சங் கொண்டார்
    ஓடிட லானார் நெஞ்சே

கஅபா தரிசனை

அண்ணலோ அல்லாஹ் விற்கே
    ஆயிரம் முறைகள் நன்றி
எண்ணத்தால் சொல்லிச் சொல்லி
    இன்புற லானார் நெஞ்சே

பத்தாயி ரம்பேர் சேர்ந்தார்.
    பாங்குறு மக்கா மக்கள்
புத்தொளி யோடு வந்தார்
    புதுமையும் என்னே நெஞ்சே

எல்லோரும் ‘கஅபா’ சென்றே
    ஏகனைத் தொழுது நின்றே
எல்லையில் இன்பங் கண்ட
    ஏற்றமும் என்னே நெஞ்சே

மக்கமோ முஸ்லிம் மக்கள்
    மாண்புடன் கொண்டார் என்றே
மிக்கவும் அமைதி யாக
    மிளிர்ந்ததும் என்னே நெஞ்சே

ஆலயத் துள்ளி ருந்த
    அடங்காத உருவை எல்லாம்
சீலமாய்ப் போக்கித் தூய்மை
    செய்திட லானார் நெஞ்சே

மெய்மைவந் ததுவே பொய்மை
    மெல்லவே அழிந்த தென்றே
மெய்மொழி தன்னை அண்ணல்
    மேன்மையாய்ச் சொன்னார் நெஞ்சே

முஸ்லிம்கள் கூடி நின்ற
    முழுமைசேர் கூட்டத் துள்ளே
விஸ்வாச மில்லா மாற்று
    வீரரும் நின்றார் நெஞ்சே

அண்ணலைக் கல்லால் அன்று
    அடித்தவர், தங்கள் தோல்வி
எண்ணிய பலரும் ஆங்கே
    இருந்திட லானார் நெஞ்சே

நெஞ்சத்தில் அவர்கள் என்ன
    நிகழுமோ ? என்றே எண்ணி
அஞ்சிட லானார் மற்றும்
    அயர்ந்திட லானார் நெஞ்சே

அழித்திடு வாரோ ? நம்மை
    அப்புறப் படுத் துவாரோ ?
பழித்தோமே என்றே எண்ணிப்
    பதைத்திட லானார் நெஞ்சே

குறைஷியர் சூழ்ந்தி ருந்த
    கூட்டத்தில் அண்ணல் கொண்ட
நிறைவுறு நேசந் தன்னால்
    நிகழ்ந்ததைக் கேளாய் நெஞ்சே

உம்மை யான் எவ்வா றிங்கே
    உவப்புடன் நடத்த வேண்டும் ?
செம்மையாய் உரைப்பீர் ! என்றே
    செப்பிட லானார் நெஞ்சே

இறைவனின் தூத ரே!எம்
    இன்னல்கள் தமை மறப்பீர்!
முறையிட்டோம் என்றே அன்னார்
    முடிதாழ்த்த லானார் நெஞ்சே

அன்பதன் வடிவ மாகி
    அவனியைக் காக்க வந்த
அண்ணலார் உரைத்த வற்றை
    அறைந்திடக் கேளாய் நெஞ்சே

அன்பீர்!உம் பிழைம றந்தோம் ;
    அன்பினால் மன்னித் திட்டோம்
என்றங்கே அண்ணல் சொல்ல
    எல்லோரும் வியந்தார் நெஞ்சே

குற்றத்தை உணரும் போது
    கொடியரும் புதிய ரன்றோ?
மற்றங்கே குறைகள் உண்டோ ?
    மன்னிக்க லானார் நெஞ்சே

இனியில்லா வண்ணம் இன்னல்கள் இழைத்த
குறைஷியர் தங்கள் பிழைகளை உணர்ந்து உணர்ந்து
மனம் வருந்தினர்.


மாபெரும் பிழைகள் செய்தோம்;
    மன்னித்த செயலி தல்ல
வோ!பெரும் பண்பென் றோதி
    உவந்திட லானார் நெஞ்சே

கற்சிலை போன்றே அன்பில்
    கட்டுண்ட குறைஷி யர்தாம்
அற்புத அண்ணல் முன்னர்
    அமைந்திட லானார் நெஞ்சே

அருளிலே கனிந்த அந்த
    அண்ணலின் முகத்தை நோக்கிப்
பெருகிய வியப்பி னோடு
    பேசிய தைக்கேள் ! நெஞ்சே

என்னேஇக் கனிவுத் தோற்றம் !
    என்னேஇச் செயலின் ஏற்றம் !
என்னேஇக் காட்சி     எல்லோரும் நின்றார் நெஞ்சே

பார்த்ததும் கவரும் இந்தப்
    பாங்கால்தான் அபுசுப் யானை
ஈர்த்தனர் போலும்! என்றே
    இயம்பிட லானார் நெஞ்சே

இப்பெருந் தகையா ரைநாம்
    இன்னலால் வாடச் செய்தோம்
அப்பப்பா ! கொடிய தென்றே
    அனைவரும் நைந்தார் நெஞ்சே


எண்ணிலாத் தொல்லை தந்தே
    ஏசிய குறைஷி மக்கள்
புண்பட்டுப் புழுங்கி நின்றே
    புலம்பிட லானார் நெஞ்சே


அகமதில் உருக்கம் தோன்ற
    அணுகிய குறைஷி யர்தாம்
முகம்மதின் இடம்பு குந்தே
    முஸ்லிமாய் ஆனார் நெஞ்சே

பார்புகழ் வள்ளல் தம்மைப்
    பார்த்துக்கை லாகு கொள்ள
ஆர்வமாய் மக்கள் வந்த
    அதிசயம் என்னே நெஞ்சே


பற்பல தெய்வத் தாலே
    பாங்கற்ற மக்கம் அன்று
பொற்பினைப் பெற்றொ ளிர்ந்த
    பொலிவினைச் சொல்வ தாமோ?


எல்லோரும் ஒன்றாய்க் கூடி
    இன்பத்தில் நிறைந்தி ருந்த
நல்லின்பக் காட்சி தன்னை
    நவிலுதல் எளிதோ ? நெஞ்சே


இஸ்லாத்தின் மாண்பு ணர்ந்தே
    இணையிலா வெற்றி கண்ட
முஸ்லிம்கள் எல்லாம் கூடி
    மொழிந்ததைக் கேளாய் நெஞ்சே

மனிதர்கள் வணங்கத் தக்க
    மாண்புளோன் அல்லாஹ் அந்தப்
புனிதனின் தூதர் ‘முஹம்மத்’
    என்றுரை பொழிந்தார் நெஞ்சே


அம்மொழி கேட்ட அண்ணல்
    அடந்தஓர் இன்பந் தன்னை
எம்மொழி யாலே யானும்
    எடுத்துரை செய்வேன் ? நெஞ்சே


பதினைந்து நாளில் மக்கம்
    பாராட்ட, அரச மைத்து
மதினாவை வந்த டைந்தே
    மகிழ்ந்திட லானார் நெஞ்சே


அறியாமைப் பிடியில் மீண்ட
    அழகுறு புனித மக்கம்
நிறைவுறு நிலையில் நின்ற
    நீர்மையும் பெரிதே நெஞ்சே

முகம்மதைப் பெற்றெ டுத்த
    முழுப்பெரும் புகழி னாலே
அகமதில் மக்கா கொண்ட
    ஆனந்தம் சிறிதோ ! நெஞ்சே


அப்துல்லா மகனார் இந்த
    அவனியின் புகழைக் கொண்டார்;
இப்பெரும் மனித ருக்கோ
    இணையில்லை என்றார் நெஞ்சே


ஆமினா பெற்றெ டுத்த
    அன்புறு மகனார் இன்று
பூமிகொள் புகழைப் பெற்ற
    பொற்பதும் பெரிதே நெஞ்சே

கதிஜாவின் கனவு யாவும்
    கைகூடக் கண்டே அண்ணல்
இதயத்தில் பொங்கி நின்ற
    இன்பமும் என்னே ! நெஞ்சே

தம்மரும் மனைவிக் காகத்
    தனிமையில் வேண்டி நின்ற
செம்மலின் குணத்தை ஈங்கு
    செப்புவ தாமோ! நெஞ்சே


மருட்செயல் ஏதும் இன்றி
    மக்காவை மீட்டுத் தந்த
அருட்கொடை யான வள்ளல்
    அருமையும் பெரிதே நெஞ்சே


ஒருசொட்டுக் குருதி யின்றி
    உயர்கஃபா வைத்தான் காத்த
பெருமையை எண்ணி எண்ணி
    பேரின்பம் கொள்வாய் நெஞ்சே


வெற்றியில் நிறைந்த அந்த
    வியத்தகு மேதை அன்பின்
பற்றினால் உயர்ந்த அந்தப்
    பான்மையப் புகழ்வாய் நெஞ்சே