| தடுத்தாட்கொண்ட புராணம் | 169 |
Periya Puranam
| |
புரந்த
வஞ்செழுத தோசை பொலிதலாற்
பரந்த வாயிரம் பாற்கடல் போல்வது. |
3
|
(இ-ள்.)
அரந்தை தீர்க்கும்........நீற்றொளியால் - (தேவாசிரியன்)
உயிர்களுக்குத் துன்பத்தைப் போக்கும் உபகாரிகளாகிய அங்கு நிறைந்த
அடியவர்கள் திருமேனிமேல் ஒழுங்குபெற அணிந்த திருநீற்றின் வெள்ளிய
ஒளியாலும்; நிறை தூய்மையால் - (அவ்வடியவர்கள் மனத்திலே நிறைந்த
பரிசுத்தத்தினாலும்; புரந்த.......பொலிதலால் - (உயிர்களைக்) காக்கவல்லதாய்
(அவர்கள் திருவாக்கில் நின்றெழுகின்ற) திருஐந்தெழுத்தின் ஒலி எங்கும்
பொருந்துதலாலும்; பரந்த........போல்வது - பரப்பினையுடைய அநேகம்
பாற்கடல்கள் ஒன்று சேர்ந்து உள்ளது போன்றது.
(வி-ரை.)
தேவாசிரியன் என்னும் எழுவாய் மேற்பாட்டிலிருந்து
வருவிக்க. தேவாசிரியன் - நீற்றொளியால் - தூய்மையால் - ஓசை
பொலிதலால் - பாற்கடல் போல்வது என முடிக்க.
அனபாயருடைய திருமனத்தைத் திருக்கைலாயத்திற்கு ஒப்புமை
சொல்கின்ற இடத்து, வரிசை - 22-ம் பாட்டில் தன்மையினாலும் -
பெருமையினாலும் - தன்மையினாலும் என்று தனித்தனிப் பிரித்துக்
காட்டியதுபோல, நீற்றொளியால், தூய்மையால், பொலிதலால் என இங்கும்
ஆசிரியர் விளக்கியது காணத்தக்கது. மயக்கம் நிகழத்தகாத இடங்களில்
சிறிதும் ஐயம் உண்டாகாதபடி தேற்றிக் காட்டுவது ஆசிரியரின் விளங்க
வைத்தல் என்னும் சிறப்பு இயல்பு. அடியவர் மேனிமேல் நீற்றொளி என்று
கூறியதால், அதற்கேற்ப அடியவர் மனத்துள் நின்றதூய்மை என்றும்,
அவர்கள் வாக்கிற் பொலி ஓசை என்றும் வருவித்துக் கொள்ளப்பெற்றது.
இவை முறையே அவர்களது காயம், மனம், வாக்குக்களின் பொலிவைக்
குறிப்பனவாம்.
அரந்தை தீர்க்கும்
அடியவர் - தம்மை அடைந்து வழிபடுபவர்க்குத்
துன்பங்களின் மிக்க பிறவித் துன்பம் நீங்க உபகரிப்பவர் அடியவராதலின்
தீர்க்கும் என்றார். தீர்க்கும் அடி என்று அடிக்கு அடைமொழியாக்கியும்
உரைப்பர். தீர்க்கும நீறு என்றுமுரைப்பர்.
அரந்தை
- வலிய துன்பம்; அல்லது பெருந்துன்பம். இங்குப் பிறவித்
துன்பத்தைக் குறித்தது. இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றுச் சீவன்
முத்தர்களாகிய பெரியோர்களும் சிவானுபவ நிட்டை நீக்கியபோது
ஓரொருகால் உலகத்தோற்றம் உண்டாகும். அப்போது முன்பழக்கவாசனை
வசத்தினாலே ஆணவமலம் வந்து தாக்கும். அக்காலத்தில் உடனிருந்து
காத்து உபகரிப்பவர்கள் அடியார்களேயாம் என்பது சிவஞானபோதம் 12-ம்
சூத்திரத்துக் காட்டிய உண்மை. இக்கருத்துப் பற்றியே மாணிக்கவாசக
சுவாமிகள் அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே
என்று அருளினார். சீவன்முத்த ஆன்மாக்களுக்கே இவ்வடியவர்கள்
உபகரிப்பவர்களென்றால், ஏனைய சாமான்ய ஆன்மாக்களுக்கு இவர்கள்
செய்யும் பேருபகாரம் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை.
தீர்க்கும்
- வாராமற் பாதுகாக்கும் என்னும் பொருள்பற்றியது.
வாராமலே காக்கவல்லவர் எனவே, வந்தபோதும் எளிதிற் காக்கவல்லவர்
என்பதும் பெறப்படும். அடியடைதலால் தீர்த்துக்கொள்ளும் என்று பொருள்
கூறுவாருமுண்டு.
நிரந்த நீற்று ஒளியால் - நிரந்த நீறு - நிரல்பட
- ஒழுங்குபெற -
பூசிய திருநீறு. அதாவது சிவாகமங்களில் கூறியபடி விதித்த தானங்களிலும்,
விதித்த அளவிலும், அணிந்த என்பதாம். உச்சி - நெற்றி - மார்பு
முதலியவை தானங்கள். நெற்றி - தோள் - மார்பு இவற்றில் ஆறு
அங்குலங்களாகவும், உச்சி - கை - முழங்கால் முதலிய இடங்களில் ஒவ்வோ
ரங்குலமாகவும் அணிதல் அளவு எனப்பெறும். திரிபுண்டரமாக அணிதல் -
உத்தூளனமாக அணிதல். முதலியவை
|
|
|
|