| 170 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
அணியும்வகை என்பர்.
இவ்வாறு விதித்த இயல்பிலே காலங்களிலே நீறு
தரிப்பவர் அடியவர் என்க.
நீற்று ஒளி - திருநீற்றினால் ஆகிய
ஒளி. வெண்ணீறே
அணியப்பெறுவதாதலின் அவ்வொளி வெண்மையுடையதாம். புண்ணியா
பூசும் வெண்ணீறு என்பது வேதம். நீற்றின் வெண்மை பாலின் வெண்மை
போன்றுள்ளது. ஆதலின் நீற்றொளி பாற்கடலுக்கு உவமேயமாயிற்று. ...பால்
வெண்ணீறும் என்ற அப்பர் சுவாமிகளது கோயிற்றிருவிருத்தத்தையுங்
காண்க. (கருமை - செம்மை முதலிய நிறமுடைய நீறு விலக்கப் பெறுவது.)
நிறை தூய்மை - அடியவர் உள்ளத்தே பிறவற்றிற்கு
இடந்தராது
முழுதும் நிறைந்த பரிசுத்தத் தன்மை. இது அகத்தூய்மை. இது வாய்மையாற்
காணப்படும் என்ப. வாய்மை - வாயின் தன்மையாம்.
வாயின் தன்மையாவது
இறைவனை வாழ்த்தி அவன் நாமத்தைப் பரவுதலாம். நமச்சிவாய வாஅழ்க
என்று மாணிக்கவாசக சுவாமிகள் அருளியபடி வாழ்த்துதலாவது அவனது
திருவைந்தெழுத்தை ஓதுதலேயாம். எனவே, இது அகம் தூய்ைமையினைக்
காட்டும் அடையாளமாகலின் புரந்த ஐந்தெழுத்தோசை என்று அடுத்துக்
கூறினார். பூசுநீறு போல் உள்ளும் புனிதர்கள் என்பதுங் காண்க.
மனத்தைத் தூய்மை செய்யும் முறையினை,
கருமுதற்
றொடங்கிப் பெருநா ளெல்லாங்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
மையிருள் நிறத்து மதனுடை யடுசினத்
தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
அன்புகொடு மெழுகி யருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புற
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையிற் றொடர்ந்து கிடந்தவென் சிந்தைப்
பாழறை யுனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி
செந்தைநீ யிருக்க விட்டனன்.... |
எனப் பட்டினத்தடிகள் (திருக்கழுமல
மும்மணிக்கோவை) விதந்தோதினது
காண்க.
பாற்கடலின் தூய்மை
- இறைவனுடைய தூய திருமஞ்சனத்திற்கு
உதவும் சாதிபற்றிப் பாலும் தூய்மையுடையதாம்.
புரந்த அஞ்செழுத்து
- உயிர்களைச் சென்ம நோயினின்றும்
காத்துவரும் மகாமந்திரமாகிய சீபஞ்சாக்கரம் என்க. மந்திரம் என்பது காப்பது
- இரட்சிப்பது - என்னும் பொருளுடையது. இது மகாமந்திரமாகலின்
மந்திரங்களினுடைய தன்மையாகிய காத்தல் சிறக்கப்பெற்றது என்பார் புரந்த
அஞ்செழுத்து என்றார். காக்குந் தன்மை ஒரு மந்திரத்திற்கு உண்டு எனில்
அது இதன் தன்மையேயாம்; இது எல்லா மந்திரங்களுக்கும் மேலானதும்
ஆதியாயதுமாம் என்பது,
ஆதி
மந்திரம் அஞ்செழுத் தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந் திரவிதி வருமே
- (திருஞா - புரா - 698) |
என்ற இடத்துத் தேற்றம்
பெற எடுத்துக் காட்டுகின்றார் ஆசிரியர். தெப்பம்
என்ற இடத்துத் தேற்றம் ஆழாமற் காக்கின்ற செயலையுடையதாதலின் புனை
என்றும் கூறுவர். அஞ்செழுத்தின் புணைபிடித்து என்பது திருவாசகம்.
|
|
|
|