சேவிக்கப்பெற்ற
இறைவனது பெருமையும் அவனது மலையின் சிறப்பும்
உணர்த்தியவாறு.
இப்புராணத்துப்
பேசப்பெறும் அடியார்களும் சிவபெருமானது
அருள்வழி நின்று திருக்கயிலையிற் கணங்களாகவும் கணநாயகர்களாகவும்
பெற்றார்கள். கணநாதனார்.
தூநறுங்
கொன்றை முடியவர் சுடர்நெடுங் கயிலைமால்
வரையெய்தி
மானநற்பெருங் கணங்கட்கு நாதராம் வழித்தொண்டி
னிலைபெற்றார்
- சேரமான்
பெருமாள் நாயனார்,
|
(6) |
...............நன்மைசேர்
கணநாதரா யவர்செயு நயப்புறு தொழில்
பூண்டார்.....
-வெள்ளானை
- 49 |
என்று வருவனவாதிய அடியார் பேறுகளைக் காண்க.
பாடி ஆடும்
- சிவனை அனுபவித்திருக்கும் சிவானந்த மேலீட்டின்
மெய்ப்பாடுகள். ஆடுவதும் பாடுவது மானந்த மாகநினைத், தேடுவது
நின்னன்பர் செய்கை பராபரமே (தாயுமா).
குறட் பூதங்களின் வலிமை கந்தபுராணம்
- மகாசாத்தாப் படலம் -
மகா காளர் வருகைப் படலம் முதலிய சரிதங்களிற் காண்க. இவை
மண்ணையும் விண்ணையும் நாட்ட வல்லன என்று கூறும் இன்னும் மற்ற
மாபுராணங்கள் இதிகாசங்களிலும் காண்க.
இத்திருமலைப் பாங்குகள் எல்லாம் வேண்டிடின் தேவர்
நிலைகளும்
ஐம்பூதமும் நாட்டுவனவாகிய சிறு பூதங்கள் பாடியாடும் பரப்பினையுடையது
அத்திருமலை என்க. குறள் - சிற்றுருவம். 6
| 17.
|
நாயகன்
கழல் சேவிக்க நான்முகன்
|
|
| |
மேய கால
மலாமையின் மீண்டவன்
றூய மால்வரைச் சோதியின் மூழ்கியொன்
றாய வன்னமுங் காணா தயர்க்குமால். |
7 |
(இ-ள்.)
நாயகன்...........மீண்டு - இறைவனது திருவடிகளைச்
சேவிக்கச்
சென்ற பிரமதேவர் அப்போது அதற்கு உரிய காலமல்லாத காரணத்தால்
திரும்பி வந்து; அவன்.....அயர்க்கும் ஆல்
- அவ்விறைவனது தூய பெரிய
கயிலை மலையினது வெள்ளிய பேரொளியிலே மறைந்து வேறு காணப்படாத
தன் ஊர்தியாகிய அன்னப்பறவையை வேறு பிரித்துக் காண முடியாமல்
வருந்துவார்.
(வி-ரை.)
நாயகன் - தலைவன். நடத்துபவன்; இங்கு எல்லார்க்கும்
தலைவன் இயங்குபவன் ஆகிய சிவபெருமானை உணர்த்திற்று. கழல் சேவிக்க
மேய நான்முகன் - என மாற்றுக.
காலம்
அலாமை - சேவித்தலுக்கு உரிய காலமல்லாததால்.
இறைவனைச் சேவித்தற்கு அடியவர்களல்லாதார்க்கு ஒவ்வொரு காலம்
வரையறுக்கப் பெற்றுள்ளது. அடியவர்கள் எப்போதும் பணிசெய்ய
உரியவர்கள். மேய் என்பதனைக் காலம் என்பதுடன் சேர்த்து
உரைப்பாருமுண்டு. அப்பொருளில் உட்புகுந்தவனாகிய என்று
வருவித்துக்கொள்க. மீண்டவன் - என ஒரு சொல்லாக்கி மீண்டவனாகி
அயர்க்கும் என்று கூட்டி உரைப்பாருமுளர்.
அன்னமுங்காணாது
- நாயகனைக் காணப் பெறாமையுடன் அன்னமும்
காணப்பெறாது என உம்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை.
தூயமால்வரைச்சோதி
- தூய்மை வெண்மையின் குறிப்பு. அது
முன்னரும் வெண்ணீறு புனைந்தன (11) என்றதனாலும்
காணப்படும்.
|