பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு49

Periya Puranam
     ஆடும் - என்றதனால் திருக்கூத்து - ஆட்டம் - என்பது
பெறப்பட்டது. இதன் இயல்பு திருமூலர் திருமந்திரம் முதலிய சைவத்
திருமுறைகளிலும் சாத்திரங்களிலும் சிவாகமங்களிலும் கண்டு கொள்க.
இதுவே முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் உயிர்கள் உய்தற் பொருட்டு
நித்தமாகச் செய்தருளும் ஐம்பெருந்தொழில்களைக் கூட்டும் திருக்கூத்து.
பஞ்சகிருத்திய நடனம் என்பர். ஆனந்தக் கூத்துமாம்.

“தோற்றந் தடியதனிற் றோயுந் திதியமைப்பிற்
சாற்றியிடு மங்கியிலே சங்கார - மூற்றமா
வூன்று மலர்ப்பதத்தி லுற்ற திரோதமுத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு” என்பது சாத்திரம்.

“இத்தொழி லைந்துநின் மெய்த்தொழி லாக”
என்று துதித்தனர் குமரகுருபர சுவாமிகள்.

“...கண்டங் கரியான் கருணை திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்து கந்தானே”

                - திருமூலர் - 9 - 84

“... தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானே”
 
              - திருமூலர் - 9 - 101

என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. இன்னும் இதன் விரிவுகளை
இப்புராணத்திலே அங்கங்கே வந்த வந்த இடங்களிலும் கண்டு கொள்க.

“அண்ண லார்தமக் களித்தமெய்ஞ் ஞானமே யானவம் பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழு மானந்த வொருபெருந்
தனிக்கூத்தும் ...”
 - திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் - 160

எனப் பின்னர்க் கூறுவதும் காண்க.

     இக்கருத்துக்களைப் புராண முதற்றிருப்பாட்டிலே “அம்பலத் தாடுவான”என்ற இடத்து வைத்தருளினார். ஆண்டுரைத்தவை பார்க்க.32

43. பூதமி யாவையி னுள்ளலர் போதென
 
  வேத மூலம் வெளிப்படு மேதினிக்
காதன் மங்கை யிதய கமலமா
மாதொர் பாகனா ராரூர் மலர்ந்ததால்.
33

     (இ-ள்.) பூதம் ... போதென - எல்லா உயிர்களிலும் உள்ளே இருந்து
மலரும் இருதய கமலம்போல; வேதமூலம் ... கமலமாம் - உலகமாகிய காதல்
மங்கையினுடைய இறைவன் வெளிப்படும் இடமாகிய இருதய கமலமாக;
மாதொர் ... மலர்ந்ததால் - தியாகேசர் எழுந்தருளிய திருவாரூர்
தென்றிசையிலே மலர்ந்து விளங்குவதாம்.

     (வி-ரை.) பூதம் - இங்கு ஆன்மாக்களைக் குறித்தது. போது -
தாமரை மொட்டு,
இங்கு இதய தாமரையைக் குறித்தது. இரத்தாசயம்
(Heart) கீழ்நோக்கிய தாமரை மொட்டுப் போன்ற உருவமுடையது என்பர்.
இதுவே இருதயமெனவும், உள்ளத் தாமரை எனவும் பேசப்பெறுவதாம்.
உயிர்களது உள்ளக் கமலத்தினிடத்தே வெளிப்படுவதுபோல இறைவன்
பூமிக்கு இதயகமலமாகிய திருவாரூர்ப் புற்றிலே விளங்குவன் என்பது
கருதுத்து.

     வேதமூலம வெளிப்படும் - வேதமூலம் - இறைவர். வெளிப்படுதல் -
தோன்றுதல். இதனை உவமான உவமேயம் இரண்டிலும் கூட்டுக. வேதமூலம்
வெளிப்படும் போதென, அது வெளிப்படும் கமலமாம் ஆரூர் என்க.