(வி-ரை.)
துலையே விமானமதாகி மேற்செல்ல
- ஐயர் தம்முன்
தொழுதிருக்கும் அழிவில்வான் பதம் கொடுத்தாராதலின், அப்பதத்திற்
சேர்த்தற்குரியதாய் நாயனாரும், மைந்தரும், மனைவியாரும் ஏறிய அந்தத்
துலையே, விமானமாக ஆயிற்று, துலையே விமானமாகி என்றதனால்
அதுவே விமான உருவம் பெற்று இவர்களை மேலெடுத்துச் சென்றது
என்றதாம். திருவருளால் - தன முதலிய பல
பொருள்களை ஒரு தட்டிலே
கொண்டும் கோவணத் தட்டுக் கீழ் இறங்கியபடியே தாழ்ந்து நிற்கும் வலிமை
பெற்றதும் திருவருட் செயலேயாம். பின்னர் இம்மூவரும் ஏறியவுடன்
இருதட்டும் நேர் நின்றதும் திருவருளேயாம். இங்கு அத்துலையே விமானமாகி
மேற்சென்றதும் திருவருளேயாம். ஆயின் முன்னர்த் திருவயிருள்
வெளிப்பாடின்றி யிருந்து இங்கு அருட்சத்தியாகி நாயனாரை அவர்
குடும்பத்துடன் அழியா இன்பத்தில் வைத்தலின் திருவருளினால்
என
வெளிப்படக் கூறினார்.
குடும்பம்
- மைந்தரும் மனைவியாரும். குறைவறக் கொடுத்த
ஆதிமூர்த்தியார் - முழுதும் இன்னருள் தந்து முன் தொழுதிருக்கும்
அழிவில் வான்பதம் கொடுத்த தனையே இங்குக் குறைவறக்
கொடுத்த
என்றார். குறைவறுதல் - எஞ்ஞான்றுங்கேடுறா
திருத்தல். குறைவற குறைவு
பிறவியாகிய குறை; அற - அறும்படியாக; கொடுத்த
- அருள் கொடுத்த;
என்றலுமாம் - அதாவது மல மற அருளிய என்பது. இச்சழக்கினின்
றேற்றுவார் (512) என்றதும் காண்க.
ஆதிமூர்த்தியாருடன்
சிவபுரியினை அணைந்தார் - பதங்கொடுத்
தெழுந்தருளிய ஆதிமூர்த்தியுனுடனே பதம் பெற்ற இவர்களும்
சிவலோகமடைந்தனர்.
அழிவில்
வான்பதம் - காலநீங்கிய நிலைமையாலே நித்தமாகிய
சுத்தபுவனம். உடன் சிவபுரியினை யிணைந்தார் என்றதனால் இறைவன்
இவரை வாராவுலக நெறியேற்றி வைத்தார் என்பதாம். அந்தச் சத்தமாகிய
சிவபுரியே நிலமிசை நீடு வாழ்வார்
என்ற வீட்டுலகமாம். 48
சுருக்கம்
:- சோழநாட்டிலே பழையாறை
என்பது சிறந்த பழம்பதி
- அதில் வணிகர் குலத்தினில் வந்தவர் அமர்நீதியார்
என்ற பெரியார்.
அவர் எந்நிலத்தினும் வருகின்ற பொன், மணி, துகில் முதலியவற்றிலே
வாணிகம்செய்து அதனால் வளமிக்கு வாழ்ந்தனர். அவர் சிவன் கழலல்லாது
வேறொன்றும் சிந்தை செய்யார்; சிவனடியார்களை அமுது செய்வித்து
அவர்களுக்கு, அவரவர் கருத்தினைத் தாமே அறிந்து, வேண்டுமாறு கந்தை,
கீள், உடை, கோவணம் என்பவற்றை உதவி வந்தனர். செல்வம் பெற்ற
பயனை அடைவாராய்த் திரு நல்லூருக்குச் சென்று அங்குத் திருவிழா அணி
சேவித்தனர்; திருக்கூட்டமாகிய அன்பர்கள் அமுது செய்யும் திருமடஞ்
சமைத்தனர். பழையாறையை விடுத்துத் திருநல்லூரிலே தாமும்
சுற்றத்தாருமாகக் குடி புகுந்தனர் அங்குத் திருவிழாவைச் சேவித்துக்
கொண்டும் அன்பர்களுக்கு இன்பமுடன் அமுதளித்தும் மகிழ்ந் துறைந்தனர்.
அந்நாட்களில்
ஒரு நாள், தமது கோவணப் பெருமையைக் காட்டி
இவர்க்கு நீடிய அருள் கொடுக்கும் பொருட்டுச் சிவபெருமான் மறையவர்
குலத்து வந்த ஒரு பிரமசாரியின் வடிவந் தாங்கி வந்தனர். அவரது
திருமுடியிலே பஞ்சசிகை இருந்தது. திருநெற்றியிலே திரிபுணடரமாக அணிந்த
சைவ வெண்டிருநீற்றின் ஒளி தழைத்தது. மெய்யிலே மான்றோலுடன் கூடிய
பூணூலும், கையிற் பச்சைத் தருப்பையாலமைந்த பவித்திரமும் விளங்கின.
இடையிலே சாத்திய முஞ்சிப் புல்லினாற் றிரித்த அரைஞாணிலே தஞ்சமாகிய
மறைக் கோவண ஆடை கட்டியிருந்தது. இவ்வாறு கொண்ட கோலத்துடனே
அடியவர்களுடைய நெஞ்சில் நீங்காத திருவடி மலர்கள் நிலந்தோயும்படி
நடந்து வந்து தொண்டரது அன்பு நெறியை வெளிப்படுத்துவதற்காகத் தாம்
ஏந்திய தண்டிலே இரண்டு கோவணங்
|